பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில் சரவணன் ,நம்ரிதா நடிப்பில் வெளியாகி உள்ள சட்டமும் நீதியும் இணைய தொடருக்கு, இசை விபின் பாஸ்கர்

வழக்கறிஞர் சரவணன் சாதாரணமான ஒரு நோட்டரியாக புகார்களை தட்டச்சு செய்து கொடுக்கும் பணியினை செய்து வருகிறார், அவரிடம் உதவியாளர் பணிக்கு சேர நம்ரிதா முயற்சி செய்கிறார். தன்னிடம் அவர் உதவியாளராக சேர்வதை விட வேறு ஒரு வழக்கறிஞரிடம் நம்ரிதா சேருவது நல்லது என சரவணன் நினைக்கிறார். இந்த சமயத்தில் குப்புசாமி என்பவர் நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே தீக்குளித்து இறந்து போகிறார், இறந்து போன குப்புசாமிக்கு எப்படியாவது நீதியை பெற்றே தீர வேண்டும் என்று நினைக்கும் சரவணன், அதற்கான பொதுநல வழக்கு ஒன்றையும் தாக்கல் செய்கிறார். தீக்குளித்து உயிரிழந்த குப்புசாமியின் மகள் காணாமல் போய்விட்டதால், அது பற்றி காவல்துறையிடம் அவர் முறையிட்டிருந்தார், ஆனால் அது குறித்து காவல்துறையினர் எந்த வழக்கையும் பதிவு செய்யாததாலேயே குப்புசாமி தீக்குளித்தார் என்று சரவணன் தன் பொதுநல வழக்கில் குறிப்பிடுகிறார். ஆனால் இறந்து போனவரின் மகள் 20 வருடங்களுக்கு முன்பே காணாமல் போய்விட்டதும் ,தீக்குளித்து இறந்த குப்புசாமி நீண்ட நாட்களாக மனநிலை பாதிப்பில் இருந்ததும் தெரிய வருகிறது, இதன்பின் ஒவ்வொரு பகுதி எபிசோடுகளிலும் பல ட்விஸ்டுகள் வரிசையாக இடம்பெறுகிறது. இறுதியில் சரவணன் தான் தொடுத்த வழக்கில் வெற்றி பெற்றாரா? இல்லையா ?உண்மையில் குப்புசாமியின் மகளுக்கு என்னதான் ஆயிற்று ?என்பது தான் இந்த சட்டமும் நீதியும் வெப்சீரிசின் மீதிக்கதை.

கதையின் மைய கதாபாத்திரத்தில் வழக்கறிஞராக நடிகர் சரவணன் சுந்தரமூர்த்தி என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், .கதாபாத்திரத்திற்கு ஏற்ற வசன உச்சரிப்பு ,.மிகை இல்லாத நடிப்பு,நேர்த்தியான உடல் மொழி இவற்றின் மூலம் தான் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்திற்கு உயிரோட்டமான நடிப்பை வழங்கி இருக்கிறார் நடிகர் சரவணன், வழக்கறிஞர் சரவணன் உடைய ஜூனியராக நடித்துள்ள நம்ரிதா, சரவணனின் கதாபாத்திரத்திற்கு உறுதுணையாக,தொடரின் கதை முழுவதும் பயணிக்கும் கதாபாத்திரத்தில், இயல்பான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார் மற்றும் ஆரோல் D சங்கர், சண்முகம், திருச்செல்வம், விஜயஸ்ரீ போன்றவர்களும் அவரவர் கதாபாத்திரங்களில் நன்கு நடித்துள்ளார்கள்.
ஒளிப்பதிவாளர் எஸ் கோகுலகிருஷ்ணன் ,விறுவிறுப்பாக பயணிக்கும் கதைக்கேற்ற வகையில், கேமரா கோணங்களை சிறப்பாக அமைத்து, நன்றாக கதையை காட்சி பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் விபின் பாஸ்கர் பின்னணி இசையில் நன்றாக ஸ்கோர் செய்துள்ளார் ,அவரது பின்னணி இசை, கதாபாத்திரங்களின் எண்ண உணர்வுகளுக்கு இணையாக, சீரிஸ் முழுவதும் பயணித்துள்ளது என்று சொல்லலாம்..வேகமும்,விறுவிறுப்பும் ட்விஸ்ட்களும் நிறைந்த திரைக்கதைக்கு பக்க பலமாக அமைந்திருப்பது படத்தொகுப்பாளர் இராவணனின் உழைப்பு என்று சொல்லலாம்.
எஸ் சூரிய பிரதாப்பின் கதைக்கு ஏற்ற காட்சிகளை விறுவிறுப்பான முறையில் படமாக்கி இருக்கிறார் இயக்குனர் பாலாஜி செல்வராஜ் .ஒவ்வொரு பாகத்திலும் ,விறுவிறுப்பான ட்விஸ்ட்களுடன்,அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வியையும் ,அதற்கான பொருத்தமான விடையையும் தொடர் முழுவதும் கொண்டு சென்று ரசிகர்களை கவரும் வகையில் இந்த சீரிஸை அவர் இயக்கி உள்ளார்.
மொத்தத்தில் இந்தத் தொடர் வேகமும், விறுவிறுப்பும் நிறைந்த தொடர் மட்டுமல்லாது, சட்டமும் நீதியும் அனைவருக்கும் பொதுவானது என்னும் கருத்தை ஆழமாக பதிவு செய்துள்ளது
