கெவி -திரை விமர்சனம்

கொடைக்கானல் உடைய மையப்பகுதியிலிருந்து பல கிலோமீட்டர் தொலைவில் , மலைக்கு நடுவில் உள்ள கெவி என்ற கிராமம் ஒன்றில் ஆதவன் வசிக்கிறார் அந்த கிராமத்திற்கு மருத்துவம், சாலை போன்ற எந்த விதமான அத்தியாவசியமான வசதிகளும் இல்லை ,எலெக்ஷன் வரும் காலங்களில் மட்டும் அந்த பகுதி மக்களை சந்திக்க வரும் அரசியல் பிரமுகர்களிடம் கேள்விக்குரல் எழுப்பும் ஆதவனுக்கும், வனத்துறை காவலர்களுக்கும் மோதல் ஏற்படுகிறது ,இதனால் ஆதவனை பழி தீர்ப்பதற்கு சரியான சந்தர்ப்பத்திற்காக வனத்துறை அதிகாரி காத்துக் கொண்டிருக்கிறார், ஒரு சமயம் தன்னுடைய கர்ப்பிணி மனைவியை மலைப்பகுதியில் தனியாக விட்டுவிட்டு மலைப் பகுதியை விட்டு கீழே ஆதவன் செல்லும் பொழுது, வனத்துறை காவலர்கள் அவரை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள், மலையின் மேல் பகுதியில் ஆதவனின் மனைவிக்கு பிரசவ வலி ஏற்படுகிறது ,எந்தவிதமான மருத்துவ வசதியோ, போக்குவரத்து வசதியோ இல்லாத அந்த கிராமத்தில் இருந்து நிறைமாத கர்ப்பிணி பெண்ணை பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வேளையில், தாய் ,சேய் இருவருக்கும் ஆபத்தான சூழல் உருவாகிறது ,வனத்துறை காவலர்களிடம் ஆதவனும் அதே வேலையில் கர்ப்பிணி பெண்ணையும், குழந்தையையும் காப்பாற்றுவதற்கு ஊர் மக்கள் போராடுகிறார்கள். இதன்பு என்ன நடந்தது என்பதை சொல்வதே கெவி படத்தின் மீதி கதை.
கதையின் அறிமுக நாயகனான ஆதவன் ,மலையன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கதாபாத்திரத்திற்கு ஏற்ற உடல் மொழியும் ,தோற்றமும் கொண்டு நன்கு நடித்துள்ள இவர் மலைவாழ் மக்களின் பிரதிநிதியாக திகழ்கிறார். அவரது மனைவியாக நடித்திருக்கும் ஷீலா யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். பிரசவ வலியில் தவிக்கும் உணர்வுகளை சிறப்பாக சித்தரிக்கும் வகையில் அமைந்து துள்ள அவரது நடிப்பு, ரசிகர்களின் மனதில் அவருக்கென அனுதாபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மேலும் வனத்துறை அதிகாரியாக சார்லஸ் வினோத்தும், மருத்துவராக காயத்ரியும், மற்றும் ஜாக்குலின் விவேக் மோகன் போன்றவர்களும் அவரவர் கதாபாத்திரத்தில் குறைவில்லாத நடிப்பை வழங்கி இருக்கிறார்கள் .
மலைப்பகுதியின் வாழ்வியலையும், அங்குள்ள கிராமங்களையும் ஒளிப்பதிவாளர் ஜெகன் ஜெயசூரியாவின் கேமரா சிறப்பாக பதிவு செய்துள்ளது. இசையமைப்பாளர் பாலசுப்பிரமணியன். ஜி மற்றும் சா.ராஜரவிவர்மாவின் இசையில் அனைத்து பாடல்களும் கதையோட்டத்துடன் நன்கு பயணித்துள்ளது, பின்னணி இசை படத்தின் காட்சிகளுக்கு தேவையான பின்புலத்தை பொருத்தமாக பதிவு செய்துள்ளது .
.
விடுமுறை காலங்களில் நாம் சென்று பார்த்து ரசிக்கும் மலைப்பகுதிகளில் ,அங்கேயே இயற்கையுடன் இரண்டறக் கடந்து வாழும் மக்களின் வலி மிகுந்த வாழ்வியலை பதிவு செய்யும் வகையில் இந்த படத்தை இயக்குனர் தமிழ் தயாளன் இயக்கியுள்ளார் .நவீனத்துவம் மலைவாழ் மக்களின் வாழ்க்கையில் சில மாறுதல்களை ஏற்படுத்தி இருந்தாலும் எத்தனை ஆட்சிகளும் ,காட்சிகளும் எவ்வளவு காலங்களும் கடந்து போனாலும் இன்றும் மாறாமல் அவர்களின் அடிப்படையான தேவைகள் இன்றும் நிறைவேறாமல் இருக்கும் விஷயங்களை அழுத்தமாக மிக ஆழமாகஇந்த கெவி பதிவு செய்திருக்கிறது
.
எத்தனையோ துறைகளில் நாம் வியத்தகு அளவில் முன்னேற்றங்களை கண்டு விட்டாலும் இன்னமும் எங்கோ ஒரு கடைக்கோடி கிராமங்களிலோ, மலைபாங்கான கிராம களிலோ வாழ்வியலுக்கு தேவையான அடிப்படை வசதிகளான மருத்துவம் சாலை போன்ற வசதிகள் கூட கிடைக்காமல் ,இன்னமும் மக்கள் வாழ்ந்துதான் கொண்டிருக்கிறார்கள் என்ற பதிவை இந்தப் படம் காட்சிகள் வாயிலாக பதிவு செய்திருக்கிறது.
மொத்தத்தில் கெவி குரலற்ற மனிதர்களின் குரலாக ஒலித்துள்ளது
