தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரே குடும்பத்தில் இருந்து அண்ணன் கதாநாயகனாக திரையில் ஜொலித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் தம்பி நாயகனாக அறிமுகமாகும் வரிசையில் உருவாகி உள்ள மற்றும் ஒரு திரைப்படம் ஓஹோ எந்தன் பேபி.

திரைத்துறையில் வெற்றி பெற வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் உதவி இயக்குனரான நாயகன் ருத்ரா, நடிகர் விஷ்ணு விஷாலை சந்தித்து படத்திற்கான கதையை சொல்கிறார்,அப்படி அவர் சொல்லும் காதல் கதை, நடிகரான விஷ்ணு விஷாலுக்கு பிடித்து போகிறது, அந்த கதை ருத்ராவின் சொந்த காதல் கதை ஆகும் ,இந்தக் கதையில் நான் நடிக்கிறேன் என்று விஷ்ணு விஷால் ஒத்துக் கொண்டாலும் ,அதில் ஒரு டுவிஸ்ட் ஏற்படுகிறது. ,அதன்படி நாயகன் தன்னுடைய லவ்வரை மீண்டும் சந்திக்க செல்கிறார்,இறுதியில் நாயகனால் காதலில் வெற்றி அடைய முடிந்ததா? இயக்குனராக வேண்டும் என்ற தன்னுடைய இலட்சியை கனவை அவர் நிறைவேற்றிக் கொண்டாரா? இல்லையா? இது போன்ற இன்னும் பல வினாக்களுக்கு விடையை சொல்கிறது ஓஹோ எந்தன் பேபி படத்தின் மீதி கதை.

கதையின் நாயகனாக உதவி இயக்குநர் கதாபாத்திரத்தில் ருத்ரா நடித்திருக்கிறார். காதல். எமோஷன் என அனைத்து காட்சிகளிலும் முதல் படம் என்று தோன்றாத வண்ணம் தன்னுடைய நடிப்பில் குறை காண முடியாத அளவிற்கு நிறைவான நடிப்பை அவர் கொடுத்துள்ளார் .இவர் தமிழ் சினிமாவிற்கு நல்லதொரு புது இளம் வரவு என்றே சொல்லலாம்.

தம்பி நாயகனாக அறிமுகம் ஆகும் படத்தில் அவருக்கு ஊக்கமும் உற்சாகம் கொடுக்கும் வகையில் நடிகராகவே விஷ்ணு விஷால் இந்த படத்தில் நடித்துள்ளார், அவருடைய கதாபாத்திரமும், அதனை அவர் வெளிப்படுத்தி இருந்த விதமும் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது.
கதையின் நாயகியாக மிதிலா பால்கர் ,மீரா என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், தோற்றத்திலும் நடிப்பிலும் இவரும் இந்த படத்தில் பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார் என்று சொல்லலாம்.மேலும் இயக்குனர் மிஷ்கின் ,கருணாகரன் ,நிர்மல் பிள்ளை ஆகியோரும், அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாக நடித்துள்ளார்கள்.இன்றைய இளைஞர்களின் ரசனைக்கேற்ப அவர்களின் சமகால வாழ்வியலை சொல்லும் காதல் கதையினை கலர்ஃபுல்லாக கொடுத்து இயக்கியிருக்கிறார் இயக்குனர் கிருஷ்ணகுமார் ராமகுமார்.
யூத் ஃபுல்லான, ரொமாண்டிக் ட்ராமா படத்திற்கு இணக்கமான ஓளிப்பதிவினை ஹரிஷ் கண்ணனும், இளம் ரசிகர்களை கவரும் வகையில் நல்ல பாடல்கள் மற்றும் இனிமையான பின்னணி இசை போன்றவற்றை ,ஜென்மார்ட்டீனும் கொடுத்து, இயக்குனரின் கதையோட்டத்திற்கு உறுதுணையாக இருந்துள்ளார்கள்.
மொத்தத்தில் இந்த ஓஹோ எந்தன் பேபி – இளம் ரசிகர்களை கவரும் ரொமாண்டிக் எண்டர்டெயின்மெண்ட்
