DNA movie Review
தான் எடுத்துக் கொண்ட கதையின் கருவிற்கு சரியான தலைப்பினை வைத்து, இன்றைய கால கட்டத்தில் நடக்கும் கொடூர குற்றங்களிருந்து நம் குழந்தையை நாம் எப்படி காப்பாற்றி கொள்ள வேண்டும், அந்த குற்றவாளிகளை எப்படி நாம் எதிர்கொள்ள வேண்டும் என்னும் எச்சரிக்கையை ஏற்படுத்தி இருக்கும் படம் டி என் ஏ

தான் காதலித்த பெண் தன்னை விட்டுப் போக, அந்த கவலையை மறக்க முடியாமல் 24 மணி நேரமும் தண்ணி அடிச்சிட்டு யார்கிட்ட என்ன பேசுகிறோம் ?என்று நிலை தெரியாம, குடும்பத்தாரின் கோபத்துக்கு ஆளாகிறார் அதர்வா, அவருடைய நண்பர்களும் உன்னை விட்டுப்போன ஒரு பெண்ணுக்காக ஏன் இப்படி இருக்கிறே என்று சொல்றாங்க,ஆனா அவ வேற ஒருத்தரையும் கல்யாணம் பண்ணிக்கல, என்ன கல்யாணம் பண்ணிக்க முடியாததுனால தற்கொலை செஞ்சுக்கிட்டாங்க அப்படிங்கற விஷயத்தை நண்பர்கள் கிட்ட சொல்றாரு, இதனால அதர்வாவின் அப்பா சேத்தன் ,தன்னுடைய இரண்டாவது பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு முடிவு பண்றாரு ஆனால் அதுக்கு தடையாய் இருக்கிற அதர்வாவை மறுவாழ்வு மையத்தில் சேர்க்குறாங்க. திரும்பி வந்த அதர்வாவுக்கு ஏதாவது ஒரு பெண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிட்டா அடுத்த மகனுக்கு கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்றாரு சேத்தன், இதனால மனநலம் சரியில்லாத பெண்ணை அதர்வாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறாரு சேத்தன் , ஒரு பக்கம் மறுவாழ்வு மையத்தில் இருந்து வந்த அதர்வா, இன்னொரு பக்கம் மற்றவர்களால் கேலி செய்யப்பட்ட ஹீரோயின் இவர்கள் இருவரும் இணைகிறார்கள்.
எப்படி இருவரும் வாழப்போகிறார்கள் என்ற கேள்விக்கு விடையாக சந்தோஷமா ,அழகா குடும்பம் நடத்திட்டு இருக்கிற அதர்வா மற்றும் ஹீரோயினை பார்த்து சேத்தன் மட்டுமில்லாமல், பலரும் ஆச்சரியப்படுறாங்க. ,ஹீரோயின் கர்ப்பமாக ஆகிறாங்க , மாதங்கள் கடக்க பிரசவ வலி ஏற்பட ஒரு தனியார் மருத்துவமனையில அவங்கள அட்மிட் பண்றாங்க,. குழந்தை பிறந்தவுடன் ஹீரோயின் கிட்ட கொடுக்கிறாங்க அதர்வா கிட்டயும் காட்டுறாங்க , தனக்கு பிறந்த குழந்தையுடைய ஸ்பரிசத்தை உணர ஹீரோயின் இந்த குழந்தை தன்னோடது இல்லன்னு சொல்ல ,எல்லாரும் அதை நம்ப மறுக்கிறாங்க ,. தன்னுடைய மனைவி சொல்வதை நம்புகின்ற அதர்வா போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்றாரு ,போலீசும் வந்து மருத்துவமனையில் விசாரிக்கிறாங்க ,அங்க இருக்கிற சிசிடிவி கேமரா எல்லாம் செக் பண்றாங்க ஆனா ஹீரோயின் சொல்றதுக்கான எந்த ஆதாரமும் இல்லாததுனால நம்ப மறுக்கிறாங்க. ,அதோட மட்டுமில்லாமல் ஏற்கனவே ஹீரோயின் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்ற அடையாளம் இருக்க அதுவே அவங்களுக்கு எதிராக அமையுது, தன்னோட மனைவி இருக்கிற நிலையை பார்த்து வருத்தப்படுற அதர்வா போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணாலும் அவங்களுடைய விசாரணையில தன்னையும் ஈடுபடுத்திக்கிறார், ஒரு கட்டத்துல டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க, அந்த ரிப்போர்ட்ல இப்ப இருக்கிற குழந்தை தன்னுடைய குழந்தை இல்லன்னு அதர்வாவுக்கு தெரிய வருது, தன்னுடைய குழந்தை இருக்க வேண்டிய இடத்துல வேற ஒரு குழந்தையை வைக்கிறதுக்கான காரணம் என்ன ?தன்னுடைய குழந்தையை ஏன் கடத்தினாங்க ?கடத்தப்பட்ட குழந்தையை அதர்வா கண்டுபிடிச்சாரா? அதன் பின்னணியிலே யார் இருக்கிறாங்க ?அப்படிங்கறதுதான் படத்தோட மீதி கதை.
கதையின் நாயகனாக ,ஆனந்த் என்னும் கதாபாத்திரத்தில் நடிச்சு இருக்கறது அதர்வாவுக்கு புதுசா இருந்தது போலவே அவருடைய நடிப்பும் புதுசா இருந்தது, டூயட் ,பாடிகிட்டு வில்லன்களோடு சண்டை போடாமல் அடிதடி காட்சிகள் எல்லாம் பெருசா இல்லாம இந்த கதாபாத்திரத்துக்கு தேவை என்ன அப்படிங்கறத உணர்ந்து அதை அழகா தன்னோட நடிப்பின் மூலமா வெளிப்படுத்தி இருக்காரு அதர்வா,போலீஸ் செய்ய வேண்டிய பல விஷயங்கள அதர்வாவே தேடி கண்டுபிடிப்பது ஹீரோயிசம் தாண்டி ஒரு பச்சிளம் குழந்தைய பறிகொடுத்த அப்பா கதாபாத்திரத்துக்கு பலம் சேர்த்திருக்கும் வகையில அதர்வா நன்றாக நடிச்சு இருக்காரு .
கதையின் நாயகியாக திவ்யா என்னும் கதாபாத்திரத்தில் மனநல பாதிப்புக்குள்ள பெண் கதாபாத்திரத்தில் மனைவி ,தாய் ,குழந்தையினை பிரிந்த ஏக்கம் , என பல பரிமாணிங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார் நிமிஷா சஜயன், மேலும் எஸ் .ஐ கதாபாத்திரத்தில் நடித்துள்ள பாலாஜி சக்திவேலின் நடிப்பு நன்றாக உள்ளது .மற்றும் விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா ,சுப்பிரமணியம் சிவா, போன்றவர்களும் அவரவர் கதாபத்திரங்களில் குறைவில்லாத நடிப்பை வழங்கியுள்ளார்கள்
தமிழ் சினிமாவில் ஒருபடத்துக்கு 5 இசை அமைப்பாளர்கள் ஏற்கனவே இரு படங்களுக்கு இசை அமைத்துள்ளார்கள் ,அவை கண்ணில் ,தெரியும் கதைகள் ,மற்றுமொன்று ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே என்னும் படங்கள், அந்த வரிசையில் இந்த திரைப்படத்திற்கும் 5 இசையமைப்பாளர்கள் உள்ளார்கள் அதன்படி ஸ்ரீ காந்த் ஹரிஹரன், சகி சிவா, பிரவீண் சைவி, சத்ய பிரகாஷ் ,அனல் ஆகாஷ் ஆகியோர் பாடல்களுக்கும், ஜிப்ரான் வைபோதா படத்திற்கு பின்னணி இசையும் அமைத்திருக்கிறார்கள்.இவர்களின் பங்களிப்பு படத்தின் .கதையோட்டத்துக்கு உறுதுணையாக உள்ளது ,கதை களத்தோடு பயணித்துள்ள பார்த்திபனின் ஒளிப்பதிவு இயக்குனரின் எண்ணத்துக்கு ஏற்ப வண்ணம் சேர்த்துள்ளது. இந்த கிரைம் ஆக்சன் டிராமாவை, நேர்த்தியான திரை ஆக்கத்தோடு படமாக்கியுள்ளார் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் .
