மோகன்லால், ஷோபனா, பிரகாஷ் வர்மா ,பினு பப்பு ,தாமஸ் மேத்யூ அமிர்தவர்ஷினி, பாரதிராஜா, இளவரசு மற்றும் பலர் நடிப்பில் தருண் மூர்த்தியின் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் தொடரும்.
சென்னையில் திரைப்பட ஸ்டண்ட் கலைஞராக இருந்த சண்முகம் (மோகன்லால்) ஒரு சூழலில் திரைப்படத்துறையை விட்டு விலகி கேரளத்தில் கேரளாவில் கார் ஓட்டுநராக உள்ளார்.மனைவி, மகன் ,மகள் என மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் வேளையில் , ஒரு ஒரு சமயம் ,அவருடைய மாஸ்டர் பழனி (பாரதிராஜா) சென்னையில் காலமாகி விட்டார் என்ற செய்தி அறிந்து அவருடைய இறுதிச் சடங்கிற்காக சென்னைக்கு சென்று விட்டு மீண்டும் தனது சொந்த ஊருக்கு திரும்பும் சண்முகத்தின் காரை காவல்துறையினர் பறிமுதல் செய்து வைத்திருக்கிறார்கள். அவருடைய கார் மீண்டும் அவருக்கு கிடைப்பதில் மிகவும் சிக்கல் இருக்கிறது, இருப்பினும் இன்ஸ்பெக்டர் ஜார்ஜிடம் சண்முகம் தன்னுடைய கார் பற்றி கூற அவரது முயற்சியால் சண்முகத்திற்கு கார் மீண்டும் கிடைக்கிறது ,அவருக்கு நன்றி சொல்லிவிட்டு சண்முகம் தனது காரை எடுத்துச் செல்லுகின்ற பொழுது மற்றும் ஒரு காவலரின் வீட்டில் நடக்கும் திருமணத்திற்கு கொண்டு போய் தங்களை டிராப் செய்துவிட்டு போகும்படி இன்ஸ்பெக்டர் கூறுகிறார்,அதன்படியே சண்முகம் அவர்களை ஏற்றுக் கொண்டு அந்த இடத்திற்கு அழைத்துச் செல்கிறார், ஆனால் அதன்பின்னர் சண்முகத்தின் வாழ்க்கையில் பல திருப்பங்களும், சிக்கல்களும் ஏற்படுகின்றன, அவற்றிலிருந்து சண்முகம் எப்படி மீண்டார் ?என்பதுதான் படத்தின் மீது கதை.

சண்முகம் என்ற கதாபாத்திரத்தில் மோகன்லால் கதையின் நாயகனாக பாசமிகு குடும்ப தலைவனாகவும், ஆக்ஷன் ஹீரோவாகவும் மாறுபட்ட பரிமாணங்களில் தன்னுடைய நடிப்பை நிறைவாக வெளிப்படுத்தியுள்ளார் ,அவருக்கு இணையாக ஷோபனா நடித்துள்ளார்,அவர் நடுத்தர குடும்பத் தலைவி கதாபாத்திரத்தில் தன்னுடைய அனுபவ நடிப்பினை வெளிப்படுத்தி தான் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்துள்ளார் .இன்ஸ்பெக்டராக தன்னுடைய மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ள பிரகாஷ் வர்மா ரசிகர்களைமிகவும் கவர்கிறார், மேலும் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்க கூடிய பினுபப்பு ,பழனியாக நடித்திருக்க கூடிய இயக்குனர் இமயம் பாரதிராஜா,மற்றும் தாமஸ் மேத்யூ, அமிர்தவர்ஷினி போன்றவர்களும் தத்தம் கதாபாத்திரங்களில் நன்கு நடித்துள்ளார்கள். ஜேக்ஸ் பிஜாயின் இசையும், ஒளிப்பதிவாளர் ஷாஜிகுமாரின் படப்பதிவும், படத்தின் காட்சிகளுக்கு மிகப் பெரிய பலத்தை கொடுத்திருக்கிறது.இயக்குனரின் எண்ண ஓட்டங்க்ளுக்கு இணையாக இவர்களும் பயணித்து, திரை மொழிக்கு பொருத்தமான ஒளி, ஒலி அம்சங்க்களை கொடுத்துள்ளார்கள்.

சென்டிமென்ட், ஆக்சன் ,திரில்லிங், சஸ்பென்ஸ் என அனைத்து அம்சங்களும் நிறைந்த ஒரு திரைப்படத்தை அனுபவமிக்க நடிகர்களை பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து, நிறைவான படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் தருண் மூர்த்தி.
மொத்தத்தில் தொடரும் அனைத்து தரப்பு திரை ரசிகர்களையும் கவரும் .
