அஜித்தும் ஆதிக் ரவிச்சந்திரனும் இணைந்து களம் இறங்கி இருக்கும் படம் ‘குட் பேட் அக்லி’. இந்த படத்தில் அஜித் குமார், த்ரிஷா, பிரபு, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சுனில், சிம்ரன், மற்றும் பலர் நடித்துள்ளார்கள் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
படத்தின் கதையின் நாயகனாக அஜித்குமார் பெரிய கேங்ஸ்டர் ஆக இருக்கிறார்,, அவருடைய மனைவி த்ரிஷா அவர்களுடைய மகனை பாசத்துடன் பார்க்க வரும் கணவனை, அவர் ஒரு கேங்ஸ்டர் என்பதால் பார்க்க வரக்கூடாது என்று த்ரிஷா கூறுகிறார், மனைவியின் வார்த்தையை ஏற்று தன்னுடைய எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு சிறைக்குப் போகிறார் அஜித் ,பின்பு தனது மகனின் 18 வது பிறந்தநாளில் கலந்து கொள்ளும் பொருட்டு அஜித் வரும் பொழுது, அவரது மகன் மீது பொய்யாக வழக்கு போடப்பட்டு சிறைக்கு செல்லும் சூழல் ஏற்படுகிறது ,தன்னுடைய மகனைக் காப்பாற்ற அவர் மீண்டும் களம் இறங்கி தன் மகனை இந்த சூழலுக்கு உள்ளாக்கியது யார் என்று கண்டு பிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார், அதில் அவர் அவர் எப்படி வெற்றி அடைந்தார் என்பதை படத்தின் மீதி கதை.
: படம் முழுவதும் ,ஆரம்பம் முதல் இறுதி வரை அஜித் குமாரின் ஆராவார பங்களிப்பு அளப்பரிய வண்ணம் சிறப்பாக உள்ளது எதிர்மறை தன்மை பொருந்திய கதாபாத்திரத்தில் அவரை காண்பதும், அதை அவர் அவர் சிறப்பாக கையாண்டு, தன் நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்கிறார் . படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் , அஜித்தின் ஃபேன் பாய் என்பதால் படம் முழுக்க அவரது முந்தைய படங்களின் ஏகப்பட்ட ரெஃபரன்ஸ்கள் பரவி காணப்படுகிறது அது அவரது ரசிகர்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
படத்தில் திரிஷா பிரபு ,பிரசன்னா, அர்ஜுன் தாஸ் ,சிம்ரன், ஜாக்கிஷராஃப் ,என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் படம் முழுவதும் விரவி காணப்படுகிறார்கள் ,இவர்கள் ஒவ்வொருவரும் தத்தம் கதாபாத்திரங்களில் தங்களுடைய அனுபவ நடிப்பினை பதிவு செய்யும் வகையில் நன்கு நடித்து உள்ளார்கள்.
படத்தின் பாடல்களை விட பின்னணிசையில் ஜிவி பிரகாஷின் பங்களிப்பு மிகவும் பாராட்டக்கூடியது. அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவு படத்தின் காட்சிகளுக்கு தேவையான பிரம்மாண்டத்தையும் அழகான காட்சியிலையும் வெளிக்கொணரும் வகையில் நன்றாக உள்ளது.

முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களை கவரும் வகையிலும் ,ஆக்சன் பட விரும்பிகளை ஈர்க்கும் வகையிலும் ஒரு பக்கா மாஸ் என்டர்டைனர் படமாக ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்
குடும்பத்துடன் பார்த்து ரசிக்க கூடிய விடுமுறைக்கால ட்ரீட் இந்த படம்.
