தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில், இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘
அடிதடி, கொலை,கொள்ளை, ஆட்கள் பலத்தோட ரவியும், அவரோட மகன் கண்ணனும் இருக்குறாங்க. இவங்க இரண்டு பேர் மீதும் பல வழக்குகள் இருந்தாலும், தங்களோட செல்வாக்க பயன்படுத்தி சுதந்திரமா, குடும்பத்தோட சந்தோஷமாக இருக்குறாங்க, பல நாட்களா இவங்க இரண்டு பேரையும் எப்படியாவது என்கவுன்டர் செய்யனுமுன்னு இருக்குற அருணகிரி S.P காத்திருக்க அதற்கான சந்தர்ப்பமும் அமையுது. காலையில கண்ணன் கோர்ட்-ல சரணடையறதுக்கு முன்னாடியே இராத்திரிக்குள்ள அப்பா, மகன் இரண்டு பேரையும் என்கவுன்டர் பண்ணிடனுமுன்னு முடிவெடுக்குறாரு.,இந்த தகவல் போலீஸ் மூலமாகவே ரவிக்கு தெரியவருது, தன்னோட மகன் பேர் மேலதான் கேஸ் இருக்குங்கிறதுனால அந்த ஒரு நாள் ராத்திரி மட்டும் பாதுகாப்பா வைச்சிகிட்டா போதுமுன்னு நெனைக்குறாரு ரவி,ஆனா இரண்டு பேரையும் காலிபண்ணனுமுன்னு S.P முயற்சி பண்றாரு, தன்னோட மகன் உயிரை காக்க S.P.அருணகிரிய கொலை செய்யனுமுன்னு முடிவு எடுக்குறாரு. அதுக்கு முன்னாடி தனக்காக எல்லா வேலைகளையும் செஞ்ச காளிய தேடி போற ரவி ,விஷயத்த அவர்கிட்ட சொல்ல ,இப்போ புது வாழ்கைய வாழ்ந்துகிட்டு இருக்குற காளி ,அதுக்கு மறுக்குறாரு, ஆனா ரவி காளியின் காலில் விழ,ரவியின் வேண்டுகோளுக்கு விசுவாசத்தின் காரணமாக காளி ஒத்து கொள்றாரு., காளி, ரவி, கண்ணன்,அருணகிரி, இந்த நால்வருக்கும் இடையே என்ன தொடர்பு? எதனால S.P.அருணகிரி, ரவி, கண்ணன் இரண்டு பேரையும் சுட்டுகொல்லனுமுன்னு முடிவு பண்றாரு?,காளியின் விவாசத்திற்கான காரணம் என்ன? கடைசியிலே யாருடைய எண்ணம் நிறைவேறுச்சிங்குறதுதான்படத்தோட மீதிக்கதை.

காளியாக நடிச்சி இருக்குற விக்ரம், ஒரு ஜனரஞ்சமான படத்துல மீண்டும் நடிச்சி இருக்குறத பாக்கும் போது, அவரோட ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல், படம் பாக்குற அனைவரையும் ரசிக்க வைச்சி இருக்காரு. விக்ரம் படம் என்றாலே தன்னை வருத்தி கொண்டு எந்தவிதமான கெட்டப்ல வருவார்ன்னு தோணும், ஆனா இந்த படத்துல அப்படி எந்த ஒரு வித்தியாசமான கெட்டப்லேயும் வராம ,காளி தோற்றத்துல வருவது அவரோட முந்தைய சில படங்கள ஞாபகபடுத்தி இருக்கு,ஆனா நடிப்புல, பல காட்சிகளில் நம்மல ஆச்சரியபடுத்தி அசத்தி இருக்காரு விக்ரம் .அவருக்கே உரித்தான நடிப்பை அந்த கதாபாத்திரல சிறப்பா வெளிபடுத்தி இருப்பது அழகு. தன் மகனுக்கு வேற யாரும் போட்டியில்லை நான்தான்னு ,நம்மை சொல்ல வைச்சி இருக்காரு விக்ரம். (குறிப்பாக ரொமான்ஸ்லேயும், போலீஸ் ஸ்டேஷன்ல ஆக்ஷன்லேயும் ). துருவுக்கு போட்டி வேற யாரும் இல்லை விக்ரம்தான்னு நம்மள பேசவைச்சிருக்காரு.
இம்மாதிரியான கதை களத்துக்குள் வழக்கமாக வரும் கதாநாயகி போல இல்லாமல் முற்றிலும் மாறுபட்டு துஷாரா விஜயன் கதாபாத்திரம் அமைந்திருப்பது ஆறுதல். அந்த ஆறுதலை தனக்கு சாதகமாக்கி தன் ஆளுமையான நடிப்பின் மூலம் ,விக்ரம் மட்டும் இல்லாமல், துஷாராவும் படத்துக்கு பலம் சேர்த்து இருக்காங்க..
பொதுவாக S.J. சூர்யா நடிப்பும், டையலாக் டெலிவரியும், வித்தியாசமாகதான் இருக்கும். ஆனா இந்த படத்துல S.P.யாக நடிச்சி இருக்குற S.J. சூர்யா அவருக்கே உரிய பாணியை நல்லா வெளிபடுத்த கூடிய வாய்ப்பு அவரோட கேரக்டர்ல நிறைய இருந்தாலும், முற்றிலுமாக மாறுபட்டு அளவாக, அழகாக, நேரத்திற்கு தகுந்தமாதிரி தன்னை மாற்றிக்கொள்ள கூடிய கேரகடருக்கு ஏத்த மாதிரியான நடிப்பையும் வெளிபடுத்தி இருப்பது சிறப்பாக இருக்கு.
இப்படத்தின் மூலமாக நேரடியாக தமிழுக்கு சுராஜ் வெஞ்சரமுடூ அறிமுகமாகி இருக்குறாரு. மகனாக நடித்து இருந்தாலும் அதை சிறப்பாக செய்து இருக்கிறார். இனி வரும்படங்களில் பல விதமான முக்கிய கதாப்பாத்திரகளில நடிக்க சுரேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். பெரியவராக வரும் மாருதி பிரகாஷ்ராஜூயுடைய அப்பாவியான முகம் ஆனா , அடபாவி என்று சொல்லும் அளவுக்கு அவரோட நடிப்பும் நல்லா இருக்கு. படத்துல மற்ற கதாபாத்திரங்களில் நடிச்சி இருக்குற பாலாஜி, மாலா பார்வதி, ஸ்ரீஜா ரவியும் காட்சிகளுக்கு பக்க துணையாக தங்களோட நடிப்பை வெளிப்படுத்தி இருக்காங்க,
ஒரு இரவுக்குள் நடக்கும் கதை. அதை சவாலா, சாமர்த்தியமா, விறுப்பான திரைக்கதை ஓட்டத்துக்கு ஏத்த மாதிரி தேனி ஈஸ்வரோட ஒளிப்பதிவு அமைஞ்சிருக்கு, G.V.பிரகாஷ் இசை, கதைகளத்துக்கு மிகப்பெரிய பலம். சித்தா படத்த கொடுத்த இயக்குனர் அருண்குமார் ஒரு மாஸ் ஹீரோவை முன்னிலை படுத்தி, தன்னோ ஸ்டைல வணிக ரீதியான அம்சங்களையும் சேர்த்து நல்லதொரு படத்தை கொடுத்து இருக்காரு.
கதையின் கரு நமக்கு பழகியதாக இருந்தாலும், வீர தீர சூரன் திரைக்கதை புதுசு, படத்தோட கால அளவை பாக்கும் போது இவ்வளவு நேரமா என்று தோன்றும். ஆனால் படம் முடிந்தபிறகு அதற்குள் முடிந்துவிட்டதா? என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தும். பல இடங்களில் பயணிப்பது போலவோ , ஏராளமான கதாப்பாத்திரங்களை கொண்ட கதையாகவோ, இல்ல வரலாற்று கதைகளாகவோ , பல ஆய்வுகளை உள் அடக்கிய படைப்பாகவோ இல்லாத ஒரு கதையை, மிகுதியான நேரத்திலும் இப்படியும் சுவாரஸ்யமாக சொல்லமுடியும்ன்னு நிருபிச்சி இருக்காரு இயக்குனர்.
