எஸ் எம் பாண்டி அவர்களின் இயக்கத்தில் சத்யா, டேனியல் அனி போப், ஜெயபிரகாஷ், தீபா சங்கர், பாண்டியன், சென்ராயன் உடன் மற்றும் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ”ராபர்”.இப்படத்தின் ஒளிப்பதிவாளர் உதயகுமார் ,இசை அமைப்பாளர் . ஜோகன் சிவனேஷ்.
கதையின் நாயகன் சத்யா கிராமத்தில் இருந்து சென்னைக்கு வேலைக்கு வராரு ,தனியார் நிறுவனத்தில் வேலை செய்ற அவருக்கு, ஆடம்பர வாழ்க்கை வாழணு,ம் மேலும் தன் கிட்ட அதிகமா பணம் இருந்தாதான் பெண்களை ஈர்க்க முடியும் என்பதற்காக தனியா வர்ற பெண்கள் கிட்ட நகை பறிப்பு செய்கிற சம்பவங்கள்ல தொடர்ந்து செஞ்சு வராரு ,தனியா போற நபர் கிட்ட முகமூடி போட்டுக்கிட்டு நகையும் பணத்தையும் கொள்ளை அடிக்கிற அவரு ,கிடைக்கிற பணத்தை வைத்து சொகுசான வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்காரு, தான் களவாடும் நகைகளை, திருட்டு நகைகளை வாங்கறதுல மிகவும் கைதேர்ந்தவரான டேனியல் அனி போப் கிட்ட விக்கிறாரு ,தொடர்ந்து அந்த டீம் கூடவே நகைகளை சத்யா விற்க ஆரம்பிக்கிறாரு,, ஒரு கட்டத்துல சத்யாவுக்கும் டேனியலுக்கும் மோதல் ஆரம்பிக்குது, மேலும் ஒரு பொண்ணுகிட்ட நகை திருடுறப்ப அந்த பொண்ணு எதிர்பாராத விதமா இறந்து போயிடறாங்க, இறந்து போன அந்த பொண்ணோட அப்பாவான ஜெயப்பிரகாஷ் இந்த சம்பவத்திற்கு காரணமான நபர தேட ஆரம்பிக்கிறாரு, இன்னொரு பக்கம் டேனியல் போப்புக்கும் சத்யாவுக்கும் நடக்குற மோதல், இறுதியில் என்ன ஆனது ?அப்படிங்கறததான் படத்தோட மீதி கதை.
கதாநாயகனாக நடித்துள்ள சத்யா ஒரே வாழ்வியல்ல ,இரண்டு மாறுபட்ட கேரக்டர்களோட வாழக்கூடிய கதாபாத்திரத்தில் ரொம்ப நல்லா நடிச்சிருக்காரு ,அதேபோல பெற்ற மகளை பறி கொடுத்துட்டு தவிக்கிறவ அப்பாவாகவும் , அதுக்கு காரணமானவனை பழி வாங்கணும் என்கிற எண்ணத்தோடு முயற்சி செய்கிறவராகவும் ஜெய்பிரகாஷ் தன்னுடைய அனுபவ நடிப்பை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பாக நடிச்சிருக்காரு, புதிய பரிமாணத்தில் வில்லனா டேனி அனி போப்பும் , அம்மாவா தீபா சங்கரும் மற்றும் சென்றாயன் ,பாண்டியன் போன்றவர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில சிறப்பா நடிச்சிருக்காங்க.
காட்சிகளின் தன்மை ஏற்ப சரியான கேமரா கோணங்களை நுட்பமான முறையில அமைச்சு சிறப்பான ஒளிப்பதிவை உதயகுமார் கொடுத்திருக்கிறாரு , இசையமைப்பாளர் ஜோகன் சிவநேஷனுடைய பின்னணி இசை படத்தின் வேகத்திற்கு பக்க பலமாக அமைஞ்சு இருக்கு .
இன்றைய கால கட்டத்துல வாழுற சில இளைஞர்கள் ,தங்களுக்கென்று நல்ல வேலை, குடும்பம் என்று வாழ்வியல் சூழல் இருந்தாலும், ஆடம்பர வாழ்க்கைக்காகவும் , தனிப்பட்ட இச்சைகளுக்காகவும் பிறருடைய நலனுக்கு கெடுதல் செய்து, அவர்களுடைய பொருட்களை அபகரித்து வாழும் சூழலுக்கும் செல்கிறார்கள், என்னும் உண்மையை இயக்குனர் எஸ் எம் பாண்டி இந்த படத்துல பதிவு செஞ்சு இருக்காரு ,நாம் அன்றாடம் செய்தித்தாள்களில் பார்க்கக்கூடிய செயின் பறிப்பு போன்ற செய்திகளுக்குப் பின்னால் உள்ள உண்மைகள், அதனால் பாதிக்கப்படுபவர்களின் குடும்பங்கள் சந்திக்கும் இன்னல்கள் ,பொருட்கள் மூலம் பரிமாறப்படும் பணம் போன்ற பின்புல செய்திகளை யாவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
மொத்தத்தில் யாருக்கோ, எங்கேயோ நடக்கிறது என்று கடந்து போய்விடாமல், நாளைக்கு நமக்கும் இதுபோல நடக்கலாம் என்ற விழிப்புணர்வை தரும் வகையில் இந்த ராபர் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது வரவேற்கக்கூடியது.
