பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் , பாட்டில் ராதா.
சில படங்களின் தலைப்புகளே அந்த படத்தின் கதையினை பார்க்க வரும் ரசிகர்களுக்கு சொல்லக் கூடிய வகையில் இருக்கும் ,அந்த வகையில் இந்தப் படத்தினுடைய தலைப்பு பாட்டில் ராதா என்பதே இந்த படம் குடியைப் பற்றி சொல்லக்கூடிய படம் என்று ரசிகர்களை யூகிக்க வைக்கும் ,ஆனால் குடியை பற்றிய படம் என்பதால் ஏதோ முழுக்க முழுக்க மெசேஜ் சொல்லும் விழிப்புணர்வு படமோ என்று எண்ணாத வகையில் சொல்ல வந்த கருத்தை நகைச்சுவையுடன் கலந்து, எளிய மக்களும் அதை உணர்ந்து கொள்ளும் வகையில் சிறப்பான படமாக இயக்குனர் தினகரன் சிவலிங்கம் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார்.
படத்தின் கதையின் நாயகனாக பாட்டில் ராதா என்ற ராதாமணி என்னும் கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் நடித்துள்ளார், இவர் படத்தில் ஒரு டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அவர் . மனைவி கதாபாத்திரத்தில் சஞ்சனா நடராஜன் நடித்துள்ளார் .மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் .ராதா மணியின் தொடர்ச்சியான மதுப்பழக்கம் அவரை மதுவுக்கு அடிமையாகிறது ,அவரை எப்படியாவது அந்த பழக்கத்தில் இருந்து மீட்டு எடுத்து விட வேண்டும் என்று தன் கணவனை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கிறார் ராதாமணியின் மனைவி .அசோக் (ஜான்விஜய் )என்பவர் நடத்தி வரும் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்படும் ராதாமணி ,அதன் பின் அந்த மதுப்பழக்கத்தில் இருந்து வெளியே வந்து தன் குடும்பத்துடன் மறுபடியும் சேர்ந்து வாழ்ந்து, புது மனிதராக வாழ்க்கையை தொடர்ந்தாரா ?இல்லையா? என்பதை பாட்டில் ராதா படத்தின் மீதி கதை சொல்கிறது.
ஏற்கனவே பல படங்களில் தன்னுடைய நடிப்பை அழகாகவும் ,ஆழமாகவும் பதிவு செய்து ,ரசிகர்கள் மனதில் இடத்தை பிடித்திருந்த குரு சோமசுந்தரம் பாட்டில் ராதாவாக இந்த படத்திலும் நன்கு நடித்துள்ளார் அவர் தான் .ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு ஏற்ப தனது தோற்றம், வசன உச்சரிப்புகள் போன்றவற்றை சிறப்பாக வெளிப்படுத்தி, கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்துள்ளார். என்றாவது ஒருநாள் எப்படியாவது தன் கணவன் அந்த பழக்கத்தில் இருந்து வெளிவந்து விடுவார் என்று மிகுந்த பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் காத்திருக்கும் அவரது மனைவிக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சுகிறது. சராசரி எளிய நடுத்தர குடும்பத்து தலைவிகளின் பிரதிபலிப்பாக, அவர்களது உணர்வுகளை சித்தரிக்கும் தன்மை கொண்ட கதாபாத்திரத்தில் சஞ்சனா நடராஜன் சிறப்பாக நடித்து ரசிகர்களிடம் குறிப்பாக ரசிகைகளிடம் மிகுந்த பாராட்டினை பெறுகிறார் .ஏற்கனவே பல திரைப்படங்களில் தான் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரங்களில் நன்கு நடித்து பெயர் பெற்ற பெயர் வாங்கியுள்ள ஜான் விஜய் இந்த திரைப்படத்தில் அசோக் என்னும் கதாபாத்திரத்தில் போதை மறுவாழ்வு மையம் நடத்துபவராக நடித்துள்ளார் .இந்த படத்தில் அவரது புதிய பாணியிலான நடிப்பும், பின்புலமும் ரசிக்கும்படி உள்ளது .மேலும் குறிப்பிட்டுச் செல்லக் கூடிய வகையில் மாறன் ,ஆண்டனி, பாரி இளவழகன் போன்றவர்களும் தங்களுடைய கதாபாத்திரங்களை சிறப்புடன் வெளிக்கொணர்ந்து குறைவில்லாத நடிப்பை நிறைவாக வழங்கியிருக்கிறார்கள்.
இன்றைய சமூக வாழ்வியலில் மது ஏராளமான குடும்பங்களில் நீக்கமற நிறைந்து விட்டதால் ஏற்படும் பிரச்சனைகள் ,மதுவுக்கு அடிமையானவர்களால் அவர்களது உடல்நலம் பாதிக்கப்படுவது மட்டுமில்லாது ,அவர்களது குடும்பத்தார் எப்படி பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பதனை, பிரச்சார நெடி இல்லாமல் சமூக கருத்தோடு பதிவு செய்து, அதே சமயம் அதை பொழுதுபோக்காக பார்க்கக்கூடிய படமாகவும் உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் தினகரன் சிவலிங்கம்.
இயக்குனரின் கண்களாக கதையினை காட்சிப்படுத்தும் பெரும்பங்கு ஒளிப்பதிவாளர்களுக்கு உண்டு அந்த வகையில் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் ரூபேஷ் ஷாஜியின் ஒளிப்பதிவு படத்தின் கதைக்கு பெரிய பக்க பலமாக அமைந்துள்ளது. பாடல்களையும் பின்னணி இசையையும் பொருத்தமட்டில் ஷான் ரோல்டன் கதைக்களத்திற்கு இணக்கமான பங்களிப்பை கொடுத்து கொடுத்துள்ளார்.
மொத்தத்தில் பாட்டில் ராதா இன்றைய சமூக வாழ்வியல் பற்றி பேசும் ஒரு படப்பதிவு.
