Thursday, January 15

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்குகானா பாடல்.

திரைப்பட இயக்குநர் மோகன் G அவர்களின் உருவாக்கத்தில், அல்ருபியான் இசையில், மோகன்ராஜ் B வரிகளில், MLR கார்த்திகேயன் அவர்களின் குரலில், #பாதயாத்திரை என்ற தலைப்பில் தயாராகியுள்ள “அரோகரா முருகா” என்ற பாடலை சிவ குரு, திருவாசக சித்தர் ஐயா சிவ தாமோதரன் அவர்கள் வெளியிட்டார்.

தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகரை வணங்க பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு சமர்ப்பணமாக இந்த பாடல் உருவாகியுள்ளது.. ஏற்கனவே சிவனுக்கு, சிவ சிவாயம் என்ற பாடலும், தற்போது முருகனிடம் பாதயாத்திரை என்ற பாடலும் மேலும் பல பக்தி பாடல்கள் தொடர்ந்து எனது உருவாக்கத்தில் வெளியாகும் என மோகன் ஜி தெரிவித்துள்ளார்.

▶️https://youtu.be/TteND-677rU

Spread the love