கதையின் நயகனான அன்சன் பால்.ஒரு ஜாலியான பேர்வழி அவர் ஓர்நாள் ரெபா ஜானை சந்தித்து காதலிலும் வீழ்கிறார் . அமெரிக்காவில் உயர் படிக்கும் முன்னேற்பாடுகளில் இருக்கும் ரெபாவை அன்சன் தினமும் பின்தொடர்ந்து தன் காதலை அவரிடம் தெரிவிக்கிறார் ஆனால் ரெபா தனது எதிர் கால கனவு குறித்து கூறி அன்சனின் காதலை ஏற்க மறுக்கிறார் அதன் பின் என்ன நடந்தது ?நாயகனின் காதலை நாயகி ஏற்று கொண்டாரா ? இல்லையா? என்பதே ‘மழையில் நனைகிறேன்’.படத்தின் மீதி கதை.
கதையின் நாயகனாக காதல் மொழி பேசும் வித்தகனாக அன்சல் பால், தான் ஏற்று கொண்ட கதாபாத்திர த்துக்கு பொருத்தமான நடிப்பை நன்கு வெளிப்படுத்தி நடித்துள்ளார் நாயகியாக நடித்திருக்கும் ரெபா ஜான், கதாபாத்திரமும் அதில் அவரது நடிப்பும் நன்றாக உள்ளது .
மேலும் மேத்தீவ் வர்கீஸ் ,அனுபமா குமார்,சங்கர் குரு ராஜா, கிஷோர் ராஜ்குமார், வெற்றிவேல் ராஜா என படத்தின் மற்ற கதாபாத்திரங்க்ளில் நடித்துள்ள கலைஞர்களும் குறை காண முடியாத நடிப்பை கொடுத்துள்ளார்கள் .
விஷ்ணு பிரசாத்தின் இசையில் பாடல்களும், பின்னணி இசையம் ரசிக்கும் படி உள்ளது. ஒளிப்பதிவாளர் ஜெ.கல்யாணின் ஒளிப்பதிவும், விஜி மற்றும் கவின் பாண்டியனின் வசனங்களும் இயக்குனருக்கு பக்க பலமாய் நின்று உள்ளது.
அழகான காதல் மொழி பேசும் கதைக்கு பொருத்தமான காட்சிகளை திரைக்கதையில் கோர்த்து, நல்லதொரு படமாக கொடுத்துள்ளார் இயக்குனர் டி.சுரேஷ் குமார்.
.
மொத்தத்தில், ‘மழையில் நனைகிறேன்’- திரையில் ஓர் காதல் மழை.
