2024 ஆண்டின் முடிவில் முத்தப்பாய் வெளிவந்து உள்ள விடுதலை பாகம் 2 திரைப்படத்தினை வெற்றி மாறன் இயக்க, இந்த படத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கிஷோர் ,கென்கருணாஸ் ,ராஜீவ்மேனன் ,போஸ் வெங்கட், சேத்தன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

மலைபகுதியில் உள்ள கிராமத்தில் கனிம சுரங்கம் அமைபதற்க்கு அரசு கொடுக்கும் அனுமதியை எதிர்த்து குரல் கொடுக்கும் போராட்டத்தில் களமிறங்கிய தமிழர் மக்கள் படையின் தலைவர் பெருமாளை(விஜய் சேதுபதி) காவலர் குமரேசன்(சூரி )கைது செய்யவதோடு, முதல் பாகம் முடிந்திருந்திருந்த வேளையில் , அதன் தொடர்ச்சியாக வெளிவந்துள்ள விடுதலை 2 படத்தின் இரண்டாம் பாகத்தின் தொடர் கதையானது, கைது செய்யப்பட்டு ,காவல் துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்படும் பெருமாளை வேறொரு இடத்திற்கு கொண்டு செல்ல அழைத்து செல்லும் ஜீப் டிரைவராக குமரேசன் இருக்கிறார்.அப்படி அவரை காட்டுப்பாதை வழியாக வேறொரு முகாமுக்குக் கூட்டிச் செல்ல காவல்துறை. முற்படும் வேளையில் , பெருமாள் வாத்தியார் தன்னுடைய சமூக அரசியல் போராட்டநிகழ்வுகளையும், காதலையும் காவலர்களிடம் விவரிப்பதில் பயணிக்கிறது.
இந்த படத்தில் பல பரிமாணிங்களில் கதையின் நாயகனாக விஜய் சேதுபதி தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படித்தியுள்ளார், இவரது திரை பயணத்தில் இந்த படம் என்றும் இவருக்கு கௌரவம் தரும் வகையில் இருக்க கூடிய வகையில் ,தன்னுடைய முழு அர்ப்பணிப்பை தந்து , நிறைவான நடிப்பை வழ ங்கியுள்ளார் . மஞ்சு வாரியரின் கதாபாத்திர படைப்பும் அதை அவர் சிறப்பாக வெளிக்கொணர்ந்த விதமும் அருமை.
முதல் பாகத்திலேயே காவலர் குமரேசனாக சிறப்பாக நடித்துபெயர் வாங்கிய சூரிக்கு, .இரண்டாம் பாகத்திலும் கொடுக்கப்பட்ட காட்சிகளில் நன்கு நடித்து மீண்டும் ரசிகர்களிடம் பாராட்டினை பெருகிறார்.மற்றும் கிஷோர் ,சேத்தன் , ராஜிவ் மேனன் , கென் கருணாஸ் கௌதம் வாசுதேவ் மேனன், இளவரசு, அனுராக் காஷ்யப், போஸ் வெங்கட் போன்றோரும் தத்தம் கதாபாத்திரங்களில் அளவான அளவில் பொருந்தி நிறைவான நடிப்பை வழங்கியுள்ளார்கள்.
ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் பங்களிப்பு , படத்தின் காட்சிகளுக்கு உயிரோட்டத்தினை கொடுத்து, மக்களின் வாழ்வியலை நன்கு பதிவு செய்துள்ளது. இளையராஜாவின் இசையில் ‘தெனம் தெனமும் உன் நெனப்பு’, பாடல் இளையராஜாவின் இசையில் மனதை வருடுகிறது,அவரது பின்னணி இசை கதை பயணிக்கும் காட்சிகளின் பின்புலத்துக்கு பெரும் உறுதுணையாக அமைந்துள்ளது.
இயக்குனர் வெற்றிமாறன் கருத்தியல் செறிந்த கதையில் சமூக வாழ்வியலில், இதற்க்கு முன்பு நடைபெற்ற மேலும் தற்போதும் நடைபெற்று வரும் சமூக அநீதிகளை காட்சிளில் கோர்த்து, பொருத்தமான நடிகர்களை நேர்த்தியாக நடிக்க வைத்ததோடு ,அத்துடன் சிறப்பான தொழில் நுட்ப கலைஞர்களையும் இணைத்து கொண்டு சிறப்பான படமாக இந்த படத்தினை உருவாக்கியுள்ளார்..
விடுதலை 2- சாமான்ய மக்களின் வாழ்வியலையும், அந்த மக்களின் விடியலுக்காக குரல் கொடுத்தவர்களின் பயணத்தையும் பதிவு செய்யும் படைப்பு..
