டாக்ஸி டிரைவரான கதையின் நாயகன் சதிஷ், ஓரு நாள் இரவு நேரத்தில் ஏற்காடு மலையில், தனது காரில் பயணிக்கும் போது எதிர்பாராதவிதமாக எதிரில் பைக்கில் வரும் ஒருவரை இடித்துவிட, .அந்த விபத்தில் வாகனஓட்டி இறந்துவிட அந்த உடலை மறைக்க சதிஷ், தனது காரின் டிக்கியில் அதை போட்டுக்கொண்டு செல்கையில் ,அடாவடியான போலீஸான பாஷாவிடம் (பாவெல் நவகீதன்) மாட்டிக்கொள்கிறார். சதிஷ் தான் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக சொல்ல தன் காரை சோதனை செய்ய சொல்லும் போது பாஷாவை அறைந்தும் விடுகிறார். குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதற்காகவும், காவலரை தாக்கியதற்காகவும் சதீஷை காவல் நிலையத்திற்கு காரோடு கொண்டு செல்லுகின்றார்கள். அதே நேரத்தில், ஏற்காட்டின் வேறொரு பகுதியில் ஒரு இளம் பெண் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார். தகவல் கிடைத்த உடன் விசாரணைக்கு வருகிறார் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் (அஜய் ராஜ்). இந்த நிலையில் விநாயகத்திற்கும் பாஷாவிற்கு இடையில் இன்ஸ்பெக்டர் சீட்டில் அடுத்து யார் அமருவது? என்கிற போட்டி வேறு உள்ளது .அதன் பிறகு என்ன நடந்தது? விபத்தில் இறந்தது யார்? கொலை செய்யப்பட்ட பெண் யார்?, சதீஷ் இந்த சிக்கலில் இருந்து எப்படி மீண்டு வந்தார் ? என்பதே சட்டம் என் கையில் படத்தின் மீதி கதை.
கதையின் நாயகனாய் புதிய பாணியில் நடித்துள்ள சதிஷ் கதாபாத்திரத்துக்கு முற்றிலும் பொருந்துகிறார்.தொடர்ந்து இது போன்ற முழு நீள கதாபாத்திரங்களில் நடிகர் சதீஷை எதிர் பார்க்கலாம் ,மேலும் பாவெல் நவகீதன் மற்றும் அஜய் ராஜ் இருவரின் நடிப்பும் திரைக்கதையின் மைய புள்ளிகளாக நன்கு உள்ளன,.மேலும் ரித்திகா, மைம் கோபி, கே.பி.ஒய்.சதீஷ், வென்பா, பாவா செல்லதுரை, ராம்தாஸ், போன்றவர்களின் நடிப்பும் படத்தின் பல இடங்களில் அவர்தம் திறமைக்கு ஏற்ற வண்ணம் காட்சிகளில் நன்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது
த்ரில்லர் படங்களுக்கு மைய நாடியாக உள்ளவை ஒரு படத்தின் ஒளியும் ஓலியும்தான், அந்த வகையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவும் ,இசையமைப்பாளர் எம்.எஸ்.ஜோன்ஸ் இசையும் பெரும் பங்கினை கொடுத்துள்ளது. அதே போல படத்தொகுப்பாளர் மார்டின் டைடஸ்.ஏ, விறுவிறுப்பான காட்சிகளுக்கு தன்னாலான பங்களிப்பை நிறைவாக கொடுத்துள்ளார் . .
தெளிவான ட்விஸ்ட்கள் நிறைந்த திரைக்கதையுடன், விறுவிறுப்பான காட்சிகளோடு நிறைவான ஒரு கிரைம் திரில்லர் படத்தினை இயக்குனர் சாச்சி கொடுத்துள்ளார்.
