கிராமம் ஒன்றில் எலக்ட்ரீஷியன் முத்தையா (குங்குமா ராஜ்).வும் அவரது மனைவியும் (வைரமாலா)வாழ்ந்து வருகிறார்கள். வேலை வெட்டி எதற்க்கும் செல்லாமல் எப்போதும் மதுபோதையில் திளைத்துக்கொண்டு இருக்கும் முத்தையாவுக்கு, வடமாநிலத்தவர்கள் இங்கே வந்து வேலை பார்ப்பதால்தான் இங்குள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது என்ற எண்ணம் ஏற்படுகிறது, இந்த எண்ணம் அவரது வீட்டுஅருகில் இருக்கும் சுனில் (பர்வைஸ் மக்ரூ) மீது வெறுப்பை விதைக்கின்றது இது மேலும் விரோதமாய் வளர்கிறது, அதன் பின் நடப்பவைகள் என்ன ? என்பதே மீதி கதை.
முத்தையாவாக கதையின் நாயகனாய் குங்குமராஜூவும்,அவரது மனைவி செல்லம்மாவாக வைரமாலாவும், வடமாநிலத்தவர் சுனிலாக பர்வேஸ் மெஹ்ரூவும் நம் கண்முன்னே வாழும் கதை மாந்தர்களாய் நன்கு நடித்துள்ளார்கள்.
தன்னுடைய கேமரா வாயிலாக ,சிறப்பான காட்சிப்பதிவுகளை நன் கண்முன்னே நிறுத்தி கதையின் ஓட்டத்துடன் நம்மையும் பயணிக்க வைக்கிறார் தேனி ஈஸ்வர் ,எஸ்.ஜே.ஜனனியின் இசை, திரை காட்சிகளின் பின்புலத்தை பிரதிபலிக்க உதவியுள்ளது.
இன்றைய கால கட்டத்தில் வாழும் மனிதர்களின் சூழலையும், அது தரும் வாழ்வியல் போராட்டங்களையும் ,பிரதிபலிக்கும் கதைக்கு ஏற்ற காட்சிகளையும் பொருத்தமான நடிகர்களையும் கொண்டு இயக்குநர் பாஸ்கர் சக்தி இந்த படத்தினை நன்கு இயக்கியுள்ளார்.
இந்த அழகிய ரயிலை காண அனைவரும் பயணிக்கலாம்.
