Monday, April 20

ஸ்டார் -விமர்சனம்

இளன் இயக்கத்தில், யுவன் இசையில், கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஸ்டார்’

வெள்ளித்திரையில் நாயகனாய் ஜொலிக்கவேண்டும் என்ற வேட்கையினை இளம்வயது முதலே கொண்டுள்ள ன்)கலையரசன் (கவின்). அதற்க்கு பக்கபலமாய் அவரது தந்தை பாண்டியன் (லால்).கனவினை நனவாக்க கலையின் போராட்டங்கள்,விபத்து என் நீளும் வாழ்வியல் போராட்டங்களுக்கிடையே அவர் பயணித்து கடைசியில் வெள்ளித்திரையில் நாயகனாக வலம் வந்தாரா ? என்பதே படத்தின் கதை.

கதையின் நாயகனாய் கலை என்கிற கதாபாத்திரத்தில் கவின் நடித்துள்ளார். கனவினை சுமந்து கொண்டு பயணிக்கும் கதாபாத்திரத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தும் வகையில் கவினின் உடல் மொழியும், தோற்றமும் அமைந்துள்ளது. டாடா திரைப்படம் போலவே இந்த படமும் அவருக்கு நிறைய ரசிகர்களை பெற்றுத்தரும்.ஸ்டில்ஸ் பாண்டியன் என்னும் கதாபாத்திரத்தில் கவினின் தந்தையாக லால் இயல்பாக நடித்துள்ளார்.கவினின் தாயாராக கீதா கைலாசம் நடுத்தர குடும்பத்து அம்மாக்களை அப்படியே பிரதிபலிக்கும் வண்ணமாக நன்கு நடித்துள்ளார்

கதாநாயகிகளாக நடித்திருக்கும் ப்ரீத்தி முகுந்தனும் மற்றும் அதிதி போஹன்கரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் குறைவின்றி நடித்துள்ளார்கள் மேலும் காதல் சுகுமார், தீப்ஸ், நிவேதிதா மாறன் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் நன்கு நடித்துள்ளார்கள்.

யுவன் சங்கர் ராஜாவின் இசையும், ஒளிப்பதிவாளர் எழில் அரசு.கே-வின் ஒளிப்பதிவும் ப்ரதீப் ராகவ்வின் படத்தொகுப்பும் படத்துக்கு மேலும் பலம் சேர்த்துள்ளன.

எடுத்துக்கொண்ட கதைக்கேற்ற காட்சிகளை, நல்ல திரைக்கதையுடன் நகர்த்தி, அனைவரையும்  கவரும் விதமான படமாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் இளன். இந்த கோடை விடுமுறையில் குடும்பஉறுப்பினர்கள் அனைவருடனும் சென்று பார்க்கக்கூடிய வகையில் அவர் இப்படத்தை இயக்கியுள்ளார்

ஸ்டார்- மின்னும் நட்சத்திரம்.

Spread the love