Tuesday, April 28

‘தி ஃபேமிலி ஸ்டார்’- விமர்சனம்

ஃபேமிலி ஸ்டார்’. திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடிக்க, கதையின் நாயகியாக நடிகை மிருனாள் தாக்கூர் நடிக்கிறார் ,பரசுராம் இயக்கியுள்ள இந்த திரைப்படத்துக்கு கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார்.

.கதையின் நாயகன் கோவர்தன் (விஜய் தேவரகொண்டா). நடுத்தரவர்க்கத்தை சார்ந்த பெரிய கூட்டு குடும்பத்தில் வாழும் இளைஞன் ,அவன் வசிக்கும் அதே வீட்டின் மாடிக்கு வாடகைக்கு குடி வருகிறார் இந்து (மிருணாள் தாக்கூர்).கோவர்தன் இந்துவின் நட்பு காதலாக பரிமாணம் பெறும் ஆகும் வேளையில் இந்து எதற்காக தனது குடும்பத்தினருடன் பழகினார் என்கிற உண்மையை கோவர்தன்.தெரிந்துகொண்டபிறகு அவர்கள் காதலில் உரசல் ஏற்படுகின்றது ,இறுதியில் இருவரும் இணை ந்தார்களா? இல்லையா? என்பதே இந்த ஃபேமிலி ஸ்டார் படத்தின் கதை.

கதையின் நாயகன் கோவர்தனாக, நடுத்தரவர்கத்தின் சேர்ந்த இளைஞனை கண்முன்னே நிறுத்தும் கதாபாத்திரத்தில் விஜய் தேவரகொண்டா நன்றாக நடித்துள்ளார்.கதையின் நாயகி இந்துவாக நடித்துள்ள மிருணாள் தாக்கூர், கதாபாத்திரத்தின் உணர்வுகளை தன்னுடைய யதார்த்தமான நடிப்பின் மூலம் எளிதாக வெளிப்படுத்தியுள்ளார், மேலும்  பாட்டியாக நடித்துள்ள ரோகிணி ஹட்டங்காடியின் அனுபவ நடிப்பும் சிறப்பாக உள்ளது.

’கீத கோவிந்தம்’ என்ற வெற்றிப் படத்தை ரசிகர்களுக்கு வழங்கிய விஜய் தேவரகொண்டா – பரசுராம் கூட்டணி மீண்டும் இந்தப்படத்திலும் கை கோர்த்து இருந்தாலும், இந்த படம் முந்தைய படத்தில் ஏற்படுத்திய ஈர்ப்பில் சற்று குறைத்துள்ளது என்றே சொல்லும் வண்ணம் உள்ளது .

இசையை பொறுத்த வரையில் கோபி சுந்தரின் இசையில் பாடல்கள் ரசிக்கும் படி உள்ளது , ஒளிப்பதிவாளர் . கே.யு.மோகனன் தன்னுடைய சிறப்பான பணியின் மூலம் நிறைவான பங்களிப்பை கொடுத்துள்ளார்.

ஒரு முழுமையான ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகியுள்ள இந்த படத்தில்,நடுத்தர வர்க்கத்து இளைஞனின் உணர்வுகளை பேசும் வகையில் காட்சிகளை அமைத்துள்ளார் இயக்குனர் பரசுராம்.

Spread the love