Saturday, April 25

நேற்று இந்த நேரம்- விமர்சனம்

இளைஞர்கள் குழுவாக ஊட்டிக்கு சுற்றுலா செல்கிறார்கள்,அப்போது அவர்களில் ஒரு இளைஞன் காணமல் போய்விடுகிறான், தொலைந்துபோன அந்த இளைஞனைப்பற்றி காவல்துறையின் விசாரணை ஆரம்பமாகின்றது, நண்பர்களிடம் மாயமான இளைஞன் குறித்து விசாரணை நடக்கும்போது அந்த குழுவை சேர்ந்த மற்றுமொரு இளைஞனும் காணாமல்போய்விடுகின்றான் ,மாயமான இருவர்களை பற்றி காவல்துறை விசாரிக்கும்போது நண்பர்கள் ஒவ்வொருவரும் ,வேறு வேறுவிதமான பின்புல கதையினை கூறுகிறார்கள், இறுதியில் காணாமல் போன அந்த இளைஞர்களுக்கு என்னவாயிற்று?அவர்களின் இந்த நிலைமைக்கு யார் காரணம்? இதுபோன்ற பல வினாக்களுக்கு விடையினை தருவதே நேற்று இந்த நேரத்தின் மீதி கதை ஆகும்.

பல நடிகர்கள் இணைந்து நடித்துள்ள இந்த கதையில் ஷாரிக்ஹாசன்,ஹரிதா,மோனிகா ரமேஷ்,நிதின் ஆ தித்யா, காவியா அமிரா,திவாகர் குமார்,ஆனந்த், அர்விந்த், இவர்களுடன் செல்வா என பல கலைஞர்கள் நன்கு நடித்துள்ளார்கள்.

நடந்த ஒரு சம்பவத்தின் பிண்ணணி,யை பல மாறுபட்ட நபர்களால் பல மாறுபட்ட கோணங்களில் சொல்லும் யுக்தி இதற்க்கு முன் சில ப ங்களில் கையாளப்பட்டதே என்றாலும், அதே பாணியில் இந்த படத்தையும் இயக்குனர் சாய் ரோஷன் .K .R .அமைத்து இருந்தாலும் சம்பந்தபட்ட கதைகளில் இன்னமும் சற்று புதுமையான அம்சங்களை இணைத்திருந்தால் அது ரசிகர்களை கவர்ந்து இருக்கும். .

இது போன்ற என்ன நடந்த்து? யாரால்,எப்படி, எங்கு நடந்தது? போன்ற கேள்விகளுக்கு விடை சொல்லும் கதைகளில், இசையும், ஒளிப்பதிவும் இயக்குனருக்கு பெரும் பக்க பலமாக இருக்கவேண்டியது அவசியம்,. அந்த வகையில் விஷாலின் ஒளிப்பதிவும்,கெவினின் இசையும் இயக்குனருக்கு பெரிதும் உதவி உள்ளது என்றே கூறலாம்.

மொத்தத்தில் நேற்று இந்த நேரம் ,நேரம் ஒதுக்கி ஒருமுறை பார்க்கலாம்.

Spread the love