மதுரையை சேர்ந்த கதையின் நாயகன் செந்தூர் பாண்டியன் தன்னுடைய நட்பு வட்டாரத்துடன் ஜாலியாக பொழுதை செலவிட்டுவருபவர் ,இணையதள பக்கங்களின் வாயிலாக பெண்களை ஆன்லைனில் தொடர்பு கொண்டு, டேட்டிங் செய்வது இவரது இயல்பான வேலைகளில் ஒன்று .அதன்படியாக மயிலாடுதுறையில் இருக்கும் நாயகி ப்ரீத்தி கரணுடன் இணையதள பக்கம் மூலமாக அவருக்கு நட்பு ஏற்பட்டு அவரை நேரில் சந்திக்க தனது நண்பனுடன் செல்கிறார் செந்தூர் பாண்டியன்.,அதன் பின் நடைபெறும் சம்பவங்களே.படத்தின் மீதிக் கதை.

இந்த படத்தின் இயக்குனர், கதாபாத்திரத்துக்கு பொருத்தமான ஒருவரை கதையின் நாயனாக்கி நடிக்க வைத்துள்ளார், நாயகன் செந்தூர் பாண்டியனும் ரவிச்சந்திரன் என்னும் கதாபாத்திரத்தில் இயக்குனர் உருவாக்கியுள்ள கதாபாத்திரத்துக்கு ஏற்ற வண்ணமாக தன்னுடைய இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார்

கதையின் நாயகி ,அரசி என்னும் கதாபாத்திரத்தில் வருகின்ற ப்ரீத்தி கரண் தோற்றத்திலும், நடிப்பிலும் ரசிகர்களை கவரும் வகையில் நடித்துள்ளார், மேலும் சுரேஷ் மதியழகன், பூர்ணிமா ரவி போன்றோரும் நன்கு நடித்துள்ளார்கள்.
பின்னணிப் பாடகரும் இசையமைப்பாளருமான பிரதீப்குமாரின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ திரைப்படத்தை பிரசாத் ராமர் எழுதி இயக்கியுள்ளார் இவர் இதற்கு முன்பு சித்தார்த் நாயகனாக நடித்த ‘எனக்குள் ஒருவன்’ படத்தினை இயக்கியவர்,.இளம் வயதினரிடையே நட்பு மற்றும் அவர்களது கனவுகள் குறித் அம்சங்களை எடுத்துக்காட்டும் வகையில் இந்த படத்தை இயக்கியுள்ளார். பிரதீப் குமாரின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் கதையின் ஊடே பயணக்கிறது.ஒளிப்பதிவாளர் உதய் தங்கவேல் படத்தொகுப்பாளர் ராதாகிருஷ்னன் தனபாலும் இயக்குனருக்கு பக்க பலமாய் அமைந்துள்ளார்கள்.
“நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே” – அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கக் கூடிய ஒரு பொழுதுபோக்கு படம். ..
