Friday, April 17

ஜோஷ்வா இமை போல் காக்க’-விமர்சனம்

கதையின் நாயகி குந்தவி (ராஹி) .நியூயார்க் நகரத்தில் வழக்கறிஞராக உள்ள அவர் போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனுக்கு  தண்டனை பெற்று தர முயற்சிப்பதால் ,குந்தவியை அந்த கும்பலினை சேர்ந்தவர்கள் முயற்சிக்கிறார்கள். இதன்பின் சென்னை வரும் குந்தவிக்கு, ஜோஷ்வா பாதுகாப்பு தந்து குந்தவியை கொல்ல வரும் ஆட்களிடமிருந்து கண்ணை இமை காப்பது போல் பாதுகாப்பு தருகிறார் ,அதன் பின் நடப்பவைதான் திருப்பங்கள் நிறைந்த மீதி திரைக்கதை.

விறுவிறுப்பான திரைக்கதையுடன் ,திறமையான தொழில்நுட்ப கலைஞர்களோடு கரம் கோர்த்து இயக்குனர் கெளதம் மேனன் இந்த படத்தை பரபரப்பான ஆக்ஷன் படமாக உருவாக்கியுள்ளார்

கதையின் நாயகனாக வருண் அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் நன்றா ஸ்கோர் செய்துள்ளார் குந்தவையாக நடித்திருக்கும் ராஹே கதாபாத்திரத்துக்கு ஏற்ற வகையில் நன்கு நடித்துள்ளார் ,மேலும் கிருஷ்ணா புதிய பரிமாணத்தில் நிறைவாக நடித்துள்ளார் ,கிட்டி (கிருஷ்ணமூர்த்தி ) திவ்யதர்ஷினி ,மன்சூர் அலி கான், விசித்திரா போன்றோரும் தங்களது சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார்கள் .

கார்த்திக்கின் பின்னணி இசையும் எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவும் ஆண்டனியின் படத்தொகுப்பும் கதையோட்டத்துடன் பயணித்து மேலும் விறுவிறுப்புக்கு வலு சேர்த்துள்ளது .

ஜோஷ்வா இமை போல் காக்க! அதிரடி ஆக்ஷன் பட ரசிகர்களுக்கு முழு நீள திரை விருந்து .

Spread the love