Wednesday, April 22

வித்தைக்காரன்- திரை விமர்சனம்

சதீஷ் மீண்டும் நாயகனாய் நடித்துள்ள படம் .-வித்தைக்காரன்

.மருத்துவமனையில் அடிபட்டு தனக்கு ஒருநாள் மட்டும் நடந்த நிகழ்வுகளை மறக்கும் கதாபாத்திரத்தில் உள்ள கதையின் நாயகன் சதீஷ், மாயாஜால நிகழ்ச்சி நடத்தி வருபவர் தங்கம், வைரம் கடத்தும் ஆனந்தராஜ், சுப்ரமணிய சிவா கும்பலை சதிஷ் தொடர்பு கொள்கிறார்,சதீஷ்க்கும் அவர்களுக்கும் இடையே எப்படி தொடர்பு? என்னும் வண்ணமாக வித்தைக்காரன் திரைக்கதை செல்கிறது. நாய் சேகர் திரைப்படத்தின் மூலம் ஹீரோவான சதீஷ் மீண்டும் முழு நீள கதையின் நாயகனாய் நடித்துள்ள திரைப்படம் தான் வித்தைக்காரன்.

. நாயகனாக நடித்துள்ள சதீஷ் இயல்பாக நடித்துள்ளார் மேலும் ஆனந்தராஜ் தன்னுடைய ட்ரெண்ட் ஆன ஸ்டைலில் காமெடி கலந்த வில்லத்தனத்தில் ரசிகர்களை கவர்கிறார் .மற்றும் .ஜான் விஜய்,சதீஷுக்கு ஜோடியாக நடித்துள்ள சிம்ரன் குப்தா,சுப்ரமணிய சிவா,மதுசூதனன் ,ஜப்பான் குமார் என பலரும் தங்களது நடிப்பில் குறைவின்றி நடித்துள்ளார்கள்.

ஒரு கொள்ளையும் அதன் பின்னணியில் நடக்கும் சம்பவங்களும் நிறைந்த , முழு நீள ப்ளாக் காமெடி கலந்த திரைக்கதையில், வித்தியாசமான திரைப்படமாக இப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் வெங்கி,அவருக்கு உறுதுணையாக . விபிஆரின் இசையும் , யுவ கார்த்திக்கின் ஒளிப்பதிவும் அமைந்துள்ளது விபிஆரின் இசையில் சுனாமிகா பாடல் ரசிக்கும்படி உள்ளது.

“வித்தைக்காரன்”.- ப்ளாக் காமெடி ரசிகர்களை ஈர்ப்பவன்.

Spread the love