Tuesday, May 5

கேப்டன் மில்லர் -விமர்சனம்

சத்ய ஜோதி பிலிம்ஸ் சார்பில் டிஜி தியாகராஜன், செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்திருக்கும் ‘கேப்டன் மில்லர்” இந்த படத்தை எழுதி இயக்கி உள்ளவர் அருண் மாதேஸ்வரன்.

சுதந்திரத்துக்கு முந்திய காலகட்டத்தில் கிராமம் ஒன்றில் தனது தாயாருடன் வாழ்ந்து வருகிறார் அனலீசன் (தனுஷ்)அந்த கிராமத்தில் உள்ள கொரனார் தெய்வம் பல நூறு ஆண்டுகளாக அந்த மக்களை பாதுகாத்து வருவதாக நம்பிக்கை உள்ளது, அவர்கள் கட்டிய கோயிலுக்குள்ளேயே சாதிய மற்றும் சமூக பாகுபாடு காரணமாக அப்பகுதியை ஆளும் அரசர்களால் அவர்கள் அதில் நுழைய அனுமதிக்க மறுக்கப்படுகிறார்கள். அந்த அரசனாலும் பிரிட்டிஷ் அரசாங்கத்தாலும் அம்மக்கள் அன்னல்படுகிறார்கள். அனலீசனின் சகோதரர் செங்கோலன் (சிவ ராஜ்குமார்) சுதந்திர இயக்க தலைவனாக இருந்து அரசர் மற்றும் இளவரசரிடமிருந்து அந்த பகுதி மக்களின் உரிமையை பெறுவதற்காக போராடுகிறார். தனக்குரிய மரியாதையை பெற பிரிட்டிஷ்-இந்திய இராணுவத்தில் சேர அனலீசன் முடிவு செய்கிறார். பிரிட்டிஷ் இராணுவத்தால் மில்லராக உள்ள அவருக்கு ஆங்கிலேயர்களை எதிர்க்கும் இந்திய மக்களை சுட்டுக் கொல்லும் பணி வழங்கப்படுகிறது.இதனால் குற்ற உணர்ச்சியுடன் இராணுவத்தை விட்டு வெளியேறும் மில்லர் புரட்சிப்படையுடன் சேருகிறார் அதன் பின் நிறைவாக பிரிட்டிஷ் படையை கேப்டன் மில்லர் வீழ்த்தினாரா? என்பது மீதி திரைக்கதையில் சிறப்பாக மிளிரும் வகையில் உள்ளது.

அனலீசனிலிருந்து கேப்டன் மில்லர் என மூன்று வெவ்வேறு பரிமாணங்களில் தன் உடல்மொழியால் நடிப்பில் சிறப்பான முத்திரையை பதித்துள்ளார் தனுஷ். தனுஷின் அண்ணன் செங்கோலனாக சிவராஜ்குமார் தன்னுடைய கதாபாத்திரத்துக்கு வலிமை சேர்க்கும் வண்ணம் நன்கு நடித்துள்ளார்மற்றும் வேல்மதியாக பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன்,இளங்கோ குமரவேல் ,நிவேதிதா சதீஷ் , அதிதி பாலன் ,விஜி சந்திரசேகர், ஜான் கொக்கன்,ஜெயபிரகாஷ் என பெரும் நட்சத்திர பட்டாள நடிகர்கள் படம் முழுவதும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்றதொரு நிறைவான நடிப்பை வழங்கி உள்ளார்கள்.

இந்த படத்தின் மற்றுமொரு தூணாக நின்று படத்தை தாங்கி நிற்பவர் என்றால் அது படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் அவர்களையே சாரும் படம் முழுக்க பயணிக்கும் அவரது சிறப்பான பின்னணி இசை படத்தின் மிகப்பெரிய பலம்.

ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுனி ,தன்னுடைய நேர்த்தியான கோணங்களாலும், நகர்வுகளாலும் படத்தின் காட்சிகளை சிறப்பாக பதிவு செய்துள்ளார்.

முந்தய காலகட்டங்களை பிரதிபலிக்கும் விதத்தில் காட்சிகளுக்கு ஏற்ற பின்புலங்களை செவ்வனே அமைத்து படம் பார்க்கும் ரசிகர்களை அக்கால வாழ்வியலுக்கு அழைத்துசெல்லும் வண்ணமாக கலை இயக்குனர் த.ராமலிங்கத்தின் பங்களிப்பு படத்தின் எல்லா காட்சிகளிலும் மிளிர்கிறது, இவருடன் பூர்ணிமா ராமசாமி மற்றும் காவ்யா ஶ்ரீராமின் ஆடை வடிவமைப்பும், பாஸ்கரின் நடன இயக்கமும் நேர்த்தியான திரைவடிவத்தை படத்தின் கதாபாத்திரங்களுக்கு கொடுத்துள்ளது .

சுதந்திரத்திற்கான போராட்டகளத்தையும் காலத்தையும் ஒட்டி நிறைய படங்கள் வந்து இருந்தாலும் அதில் சொல்லப்படாத அக்கால வாழ்வியல் சூழலை சிறப்பாக பதிவு செய்துள்ளார், படத்தின் இயக்குனரும் எழுத்தாளருமான அருண் மாதேஸ்வரன் மேலும் அந்த மக்களின் வாழ்வியலை பேசும் மதன்கார்க்கியின் வசனங்கள் படத்துக்கு மேலும் பலம் சேர்த்துள்ளன.

மொத்தத்தில் இந்த கேப்டன் மில்லர் ஒரு தரமான ஆக்ஷன் விருந்து மட்டுமல்ல ,அழுத்தமான வாழ்வியல் பதிவு .

Spread the love