Friday, April 24

“அவள் பெயர் ரஜ்னி- விமர்சனம்

படத்தின் ஆரம்பத்தில் சென்னையிலிருந்து கேரளாவிற்கு சைஜு க்ரூப்பும் அவரது மனைவியான நமிதா ப்ரமோத்தும் காரில் செல்கிறார்கள் போகும் வழியில் எரிபொருள் இல்லாமல் கார் நின்று விடுகிறது.காரில் நமிதா ப்ரமோத்தை விட்டுவிட்டு பெட்ரோல் வாங்க செல்கிறார் சைஜு. அப்போது, ஒரு உருவம் காரின் மேல் ஏறி, சைஜுவை குத்தி கொலை செய்கிறது.நமிதா ப்ரமோத் அங்கிருந்து தப்பித்து விடுகிறார். அந்த கொலையை நிகழ்த்தியது மனிதனா ?அல்லது வேறு சக்தியா..? என்பதில் மர்மம் நிறைந்துள்ளது. இந்த நிலையில் நமிதா ப்ரமோத்தின் தம்பி யான கதையின் நாயகன் காளிதாசுக்கு தன் அக்காவிற்கு இப்படி நடந்ததை இழப்பை ஏற்க முடியாமல் , காவல்துறையுடன் சேர்ந்து கொலையாளியை கண்டுபிடிக்க தொடங்குகிறார்.இறுதியில் இந்த கொலையை செய்தது ஒரு பெண்ணா? ஆவியா ?, கொலைக்கான பின்ணணி என்ன? கொலைக்கான காரணத்தை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…

நவீன் என்னும் கதாபாத்திரத்தில் காளிதாஸ் ஜெயராம், கௌரி என்னும் கதாபாத்திரத்தில் நமீதா பிரமோத் மற்றும் அஸ்வின் குமார், கருணாகரன், சைஜூ குரூப், ரெபோ மோனிகா ஜான், ஷான் ரோமி என நடித்துள்ள பலரும் தங்களது கதாபாத்திரத்தின் இயல்புக்கு ஏற்ற இசைவான நடிப்பை கொடுத்துள்ளார்கள் .

வினில் ஸ்கரியா இயக்கத்தில் தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் உருவாகியுள்ள இப்படத்துக்கு த்ரில்லர் கதைக்கு ஏற்ற ஒளிப்பதிவை ஆர்.ஆர்.விஷ்ணுவும் இசையினை இசைக்குழு 4 மியூசிக்ஸும், தீபு ஜோசப்பின் படத்தொகுப்பும் நன்கு வழங்கியுள்ளது.

த்ரில்லர் கதைக்கு ஏற்ற வகையில் காட்சிகளும் ,களமும் இணைந்த விறுவிறுப்பான திரைக்கதையில் இன்னமும் கவனம் செலுத்தியிருந்தால் அது இயக்குநர் வினில் ஸ்கரியாவுக்கு பெயர் பெற்று கொடுத்திருக்கும் .

Spread the love