முன்னாள் இராணுவ வீரரான ஆடுகளம் நரேன், நியாயத்துக்காக குரல் கொடுத்து போராடும் ஒரு குழுவின் வழிகாட்டியாக உள்ளார் ஒரு கடையில் பணியாற்றி கொண்டிருக்கும் தாமரை என்கிற பெண்ணை, மூன்று நண்பர்கள் ஒருவரை ஒருவர் அறியாமல் காதலிக்கின்றனர். ஒரு சமயம் மூன்று பேரையும் தனித்தனியாக பார்க்க அழைக்கிறார். அந்த சமயத்தில் அங்கு அந்த குழுவினர் அவர்கள் மூன்று பேரையும் தாக்குகின்றனர், அந்த குழுவுக்கும், இளைஞர்கள் மூன்று பேருக்கும் என்ன தொடர்பு ? என்பதே படத்தின் மீதி கதை.

இப்படத்தில் பல படங்களில் பல தரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து நம் மனதில் இடம் பெற்ற ஆடுகளம் நரேன் இந்த படத்தில் ஒரு முக்கியமான் கதாபாத்திரத்தில் நன்கு நடித்துள்ளார் ,மேலும் சின்னத்திரை நடிகர் பாண்டி கமல் ,கதையின் நாயகியாய் மேக்னா எலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இயல்பாக நடிதுள்ளனர். மற்றும் வெங்கால்ராவ், முத்துக்காளை ஆகியோரும் கொடுத்த பாத்திரங்களில் குறைவின்றி நடித்துள்ளார்கள்
“இந்த கிரைம் தப்பில்ல” திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குனர் தேவகுமார். எடுத்துக்கொண்ட கதையை அதன் இயல்புக்கு ஏற்ற காட்சிகளை கொண்டு படமாக்கியுள்ளார், பரிமளவாசன் இசையும் ஏ.எம்.எம்.கார்த்திகேயனின் ஒளிப்பதிவும் இயக்குனருக்கு பக்கபலமாய் அமைந்து துள்ளது.
