அரசு அதிகாரியாக இருக்கும் ஈஸ்வரின் அண்ணன் இறந்த பிறகு, தன் அண்ணனின் மகள் சுந்தரி (சஹஸ்ரா)மற்றும் அண்ணி (அஞ்சலி நாயர்)யுடன் வாழ்ந்துவருகிறார், எட்டு வயதான சுந்தரிக்கு தன் சித்தப்பா ஈஸ்வரன் மீது அளவு கடந்த பாசம். தன்னுடைய ஆசை மகள் சுந்தரியின் தோழிக்கு நேரிடும் கொடுமைக்கான பழி சித்தார்த்தின் மீது வீழ்கிறது, அதன் பின்னர் தன் அண்ணன் மகள் சுந்தரிக்கும் நடக்கும் சில மோசமான நிகழ்வுகளிருந்தும் ஈஸ்வரன் எப்படி மீண்டார்? இந்த இடர்பாடுகளை அவர்கள் எப்படி எதிர் கொண்டார்கள்? என்பதுதான் சித்தா படத்தின் கதை.

அண்ணன் மகளின் ஆசை சித்தப்பாவாக ஈஸ்வரன் என்னும் கதாபாத்திரத்தில் சித்தார்த் சிறப்பான நடிப்பை வெளிப்படித்தியுள்ளார் .அவரது இந்த கதாபாத்திரம் அவரின் கலைப்பயணத்தில் முக்கியமான இடத்தை அவருக்கு பெற்றுத்தந்துள்ளது , பள்ளிக் காதலி மீதான தன் நேசம் , தன் அண்ணன் மகள் மீது பாசம், பதற்றம் வேகம் ,ஆவேசம் என பலதரப்பட்ட உணர்வுகளை நேர்த்தியாக வழங்கியுள்ளார் சித்தார்த்.

நாயகியாக நடித்துள்ள நிமிஷா சஜயன், தான் ஏற்றுள்ள கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை சரியாக கொடுத்து மனதில் நிறைகிறார் மேலும் சுந்தரியாக நடித்த சஹஸ்ரா, பாலாஜி போன்றோரும் நன்கு நடித்துள்ளார்கள்
ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்ரமணியனும்,இசையமைப்பாளர் திபு நினன் தாமஸும், விஷால் சந்திரசேகரின் பின்னணி இசையும் கதைக்கும் காட்சிகளுக்கும் ஏற்ற திரைமொழியை சிறப்பாக தந்து படத்தின் கதையோட்டத்துக்கு உறுதுணையாய் நின்றுள்ளன.

உறவுகளையும் உணர்வுகளையும் சித்தரிக்கும் கதைக்கேற்ற நடிகர்களை தேர்வு செய்வதில் துவங்கி ,பொருத்தமான காட்சிகளுக்கு இணையாக திரைக்கதை மற்றும் நல்ல வசனங்களையும் கொண்டு சித்தாவை சிறப்பாக படைத்துள்ளார் இயக்குநர் S.U.அருண்குமார்.
சென்டிமென்ட், எமோஷன், ஆக்ஷன் என யாவும் நிறைந்த சித்தா எல்லா தரப்பு பார்வையாளர்களின் மனதிலும் இடம் பெறுவான்.
