Thursday, April 16

துடிக்கும் கரங்கள்-  விமர்சனம்

காவல் துறை அதிகாரியான ஐ.ஜி தேவராஜின் மகள், அவரின் காரிலேயே இறந்து கிடக்கிறார். இதனை அறிந்த ஐ.ஜி தேவராஜ் இதை ரகசியமாக விசாரிக்க இன்ஸ்பெக்டர் சௌந்தராஜனை விசாரணை அதிகாரியாக நியமிக்கிறார் ஐ.ஜி.அதேபோல் சமீர் என்பவரும் திடீரென்று காணாமல் போகிறார். சமீரின் அப்பா (சங்கிலி முருகன்) ஊரிலிருந்து வந்து அவரை தேடிக்கொண்டிருக்கிறார்.அவர் கொத்து பரோட்டா என்ற பெயரில் யூடுயூப் சேனல் நடத்தி வரும் விமலையும்அவரது நண்பரான சதிஸையும் சந்திக்கிறார்இறுதியில் அவரது மகன் கண்டுபிடிக்கப்பட்டனா ? ஐ.ஜி மகள் கொலைக்கான காரணம் என்ன ?போன்ற வினாக்களுக்கு விடையை தருகிறது மீதி படத்தின் கதை.

கதையின் நாயகனாய் விமல் வெற்றி என்னும் கதாபாத்திரத்தில் நன்கு நடித்துள்ளார் பெரும்பாலும் கிராமத்து கதைகளிலேயே நடித்து வரும் அவர் நகரத்து நாயகனாய் ஒரு யூடியூபராக நடித்துள்ளார் மேலும் விமலின் நண்பராக வரும் சதிஷ் ,கதாநாயகியாக மிஷா நரங் நடித்துள்ள இப்படத்தில் சதீஷ், சுரேஷ் மேனன், சவுந்தர்ராஜா, இயக்குநர் சண்முகம், மீரான்பாய் என்னும் கதாபாத்திரத்தில் சங்கிலி முருகன், பில்லி முரளி உள்ளிட்ட பலரும் குறைவின்றி நடித்துள்ளார்கள்.

எடுத்துக்கொண்ட கதையினை பொருத்தமான காட்சிகளின் தொகுப்போடு இயக்குனர் வேலுதாஸ் இயக்கியுள்ளார் மணி சர்மாவின் சகோதரர் மகன் ராகவ் பிரசாத் இசையமைத்துள்ளார் இந்த படத்தின் ஒளிப்பதிவை ராமியும் கவனித்துள்ளார். படத்தொகுப்பை லாரன்ஸ் கிஷோரும் கலை வடிவமைப்பை எஸ்.கண்ணனும் மேற்கொண்டுள்ளனர்.படத்தின் இரண்டாம் பாதி ஆரம்பிப்பதருக்கு முன்பாகவே கொலையை யார் செய்தது என்பது தெரிந்துவிட்டதால், அதற்கு பிறகு நடப்பவைகளை ரசிகர்களால் எளிதாக கணிக்க முடிவதால் சற்று சுவாரஸ்யம் குறைகிறது. தலைப்புக்கு ஏற்ற வேகம் இன்னமும் திரைக்கதையில் இருந்திருக்கலாம் .

Spread the love