சமூக ஊடகங்கள் வழியே எளிதாக தொடர்புகொள்ளும் கால கட்டத்தில் ஒரு காலத்தில் மக்களின் ஒரேதகவல் பரிமாற்ற தூதுவர்களாய் காணப்பட்ட தபால்காரர்களை பற்றி பேசும் படமாக வந்துள்ளது ஹர்காரா.
தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு மலைகிராமத்தில் இருக்கும் போஸ்ட் ஆஃபீசில் புதிய போஸ்ட் மேனாக வரும் காளிக்கு (காளி வெங்கட் ) அங்கு வேலை செய்ய விருப்பமே இல்லை . அதனால் அந்த தபால் நிலையத்தை மூட வைத்துவிட்டு வேறு ஒரு வேலைமாறுதல் வாங்கி கொண்டு சென்று விட தீர்மானிக்கிறார், இந்நிலையில், மலைமீதின் மீது இருக்கும் கிராமம் ஒன்றுக்கு தபால் கொடுக்க செல்லும் காளிக்கு வழித்துணையாக மலைவாசி ஒருவர் வருகிறார்.அவர் மூலமாக 150 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களின் காலகட்டத்தில் அரசாங்க தபால்காரராக பணியில் இருந்த மாதேஷ்வரனை பற்றி அறிந்து கொள்கிறார். அந்த தபால்காரரின் கதை என்ன? அவரின் கதையினை கேட்ட பின் காளியிடம் ஏற்பட்ட மாற்றங்களை சொல்லுகிறது மீதி படத்தின் கதை
பல படங்களில் நாம் வெவ்வேறு கதாபாத்திரங்களில் பார்த்து இருந்த காளி வெங்கட்இந்த படத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாய் பயன்படுத்திக்கொண்டு நடிப்பில் முத்திரை பதித்துள்ளார், அதேபோல மாதேஸ்வரனாக நடித்திருக்கும் இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோவும் தன் பங்குக்கு குறைவின்றி நிறை வாக நடித்துள்ளார் ,மேலும் கௌதமி சௌத்ரி,’பிச்சைக்காரன்’ மூர்த்தி, ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன், அம்பேத், குலோத்துங்கன் ,பாலுபோஸ் போன்றோரும் ஏற்று கொண்ட பாத்திரங்களுக்கு உகந்த வண்ணம் நன்கு நடித்துள்ளார்கள்.
ஒரு காலத்தில் மக்களின் ஒற்றை தொடர்பு பிரதிநிதியாக இருந்த தபால்காரர்களின் பெருமையை, முக்கியவத்துவத்தை இன்றைய காலகட்டத்தில் வாழும் இளைய சமுதாயத்தினரின் அறிந்துகொள்ளும் வகையில் கதையினை உருவாக்கி, அதில் நடிக்கவும் செய்து இயக்குனர் ராம் அருண் கேஸ்ட்ரோ நன்கு இயக்கியும் உள்ளார்.

பிளிப்ஸ் ஆர்.சுந்தர் மற்றும் லோகேஷ் இளங்கோவனின் கேமரா மலைசூழ்கிராமத்தை அழகாக பதிவு செய்துள்ளது , பாடல்கள் மற்றும் பின்னணியிசையினை கதைக்கு ஏற்ற வண்ணம் நன்கு கொடுத்துள்ளார் ராம் சங்கர். குறிப்பாக ‘அஞ்சல்காரன்’ பாடல் ரசிக்கும் படி உள்ளது
மொத்தத்தில் ஹர்காரா கடந்த தலைமுறையினருக்கு நினைவு, இன்றைய தலைமுறையினருக்கு பதிவு.
