Saturday, April 25

வெப்- விமர்சனம்

ஐ டி துறையில் பணிபுரியும் 3 இளம் பெண்கள் மது ,போதை மருந்துக்கு அடிமையாகி வீக் எண்ட் பார்ட்டி, பார் ,என மனம் போக்கில் வாழ்க்கையை நடத்தி வரும் சூழலில் ஒரு சமயம் சமயம் இவர்கள் 3 பேர் மற்றும் அவர்களுடைய தோழி யுடன் 4 பேரையும் நட்டி கடத்தி சென்று ஒரு பாழடைந்த் வீட்டுக்குள் அடைத்து தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் அவர்களை வைக்கிறார், அவர் எதற்காக அந்த பெண்களை கடத்துகிறார்?அந்த பெண்களை கடத்தும் நட்டி யார்? அவருடய பின்ணணி என்ன? அந்தப் பெண்கள் அவரிடமிருந்து தப்பித்தார்களா? போன்ற கேள்விகளுக்கு விடை தருகிறது மீதி படத்தின் கதை .

படத்தில் கதையின் நாயகனாய் நட்டி வீரா என்னும் கதாபாத்திரத்தில் புதிய பரிமாணத்தில் நன்கு நடித்துள்ளார், நவநாகரீக நங்கையர்களா ஷில்பா மஞ்சுநாத், சுபப் பிரியா மலர், ஷாஷ்வி பாலா, அனன்யா மணி என்ற நால்வரும் கொடுக்கப்பட்ட பாத்திரத்துக்கு தேவையான அளவில் குறைவின்றி நடித்துள்ளார்கள்,மொட்டை ராஜேந்திரனுக்கு இன்னமும் சில காட்சிகள் சேர்த்து கொடுத்திருந்தால் அது ஆடியன்ஸ்க்கு சற்று ரிலீப் கொடுத்து கதையோடு செல்ல உதவி இருக்கும்.
,

இதுபோன்ற திரில்லர் கதைகளுக்கு இசையும், ஒளிப்பதிவும் மிகவும் திறம்பட இருந்தால்தான் அது படம் பார்ப் பவர்களுக்கு கதையோடு பயணிக்க வைக்கும் ,அதே போல இந்த படத்துக்கு ஒளிப்பதிவை கிறிஸ்டோபர் ஜோசப்பும், இசையினை கார்த்திக் ராஜாவும் நன்கு வழங்கியுள்ளார்கள் .

இன்றைய இளைஞர்களின் பாதை மாற்றும் போதை பற்றிய விழிப்புணர்வு தரும் கருத்துடன் படத்தை இயக்கியிருக்கும் அறிமுக இயக்குனர் ஹாரூன் பாராட்டுக்குரியவர்.

வெப் – இன்றைய காலகட்டத்தில் தனிமனித வாழ்வியலை சொல்லும் படங்கள் மட்டுமின்றி, இது போன்ற நாம் வாழும் சமூகவியலோடு சேர்ந்த கதை சொல்லும் படங்களும் அவசியம்.

Spread the love