Thursday, April 23

`லவ்’ விமர்சனம்

அஜய் (பரத்) திவ்யா (வாணி போஜன்) இருவரும் தம்பதிகள் ,அவர்களது ஒரு வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு, ஒரு சூழ்நிலையில் ஏற்படும் வாக்குவாதம் தீவீரமாகி கைகலப்பாக வலுக்கும் நிலையில் அஜயி(பரத்)னால் திவ்யா(வாணிபோஜன் )கொல்லப்படுகிறார். கருவுற்றிருக்கும் நிலையில் மரணத்தினை தழுவும் , திவ்யாவின் சடலத்தை அங்கிருந்து எந்தவிதமான தடயமுமின்றி அகற்ற அஜய் (பரத்) முனைகிறார் , இந்த சூழ்நிலையில் நண்பர் விவேக் பிரசன்னா, அதன் பின் பிக்பாஸ் டேனியும் அங்கு வருகிறார்கள் ஒரு கட்டத்தில் திவ்யாவின் (வாணி போஜன்) அப்பாவான ராதாரவியும் அங்கு வந்து செல்கிறார். இறுதியில் திவ்யாவின் பிரேதம் அகற்றப்பட்டதா? அஜய் (பரத்)என்ன ஆனார்? இப்பபடிப்பட்ட பல கேள்விகளுக்கு விடையினை மீதி கதை தருகிறது.

லவ், ஆர்.பி.பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.பாலா தயாரித்து இயக்கியுள்ள படம் ,மலையாளத்தில் 2020 ஆம் ஆண்டு வெளியான லவ் படத்தின் ரீமேக் படம்தான் இந்த லவ் , ஆர்.பி.பாலா ,காதல், த்ரில்லர், டிராமாவாக உருவாக்கியுள்ள இந்த படத்தில் நிறைய திருப்பங்களுடன் திரைக்கதை அமைத்துள்ளார்.

காதலில் தனது திரைப்பயணத்தை துவங்கிய பரத் லவ் என்னும் 50 வது படத்தில் புதிய பரிமாணத்தில் நடித்துள்ளார் .அவருக்கு இணையாக வாணிபோஜனும் தன்னுடைய கதாபாத்திரத்துக்கு ஏற்ற வகையில் நடிப்பை வழங்கியுள்ளார் மேலும் நண்பராக விவேக் பிரசன்னா, டேனி, அப்பா கதாபாத்திரத்தில் ராதாரவி போன்றோரும் தங்களது பங்குக்கு குறைவின்றி நடித்துள்ளார்கள்

தொழில்நுட்பாளர்களை பொறுத்தவரையில் பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவும் , அஜய் மனோஜின் படத்தொகுப்பும் கதையின் நகர்வுக்கு முடிந்தவரை பலம் சேர்த்துள்ளன ,பின்னணிஇசையை பொறுத்தவரையில் ரோனி ரபேல் தன் பங்கை நிறைவாக செய்துள்ளார்.தமிழில் இவருக்கு இது முதல் படம்.

லவ் -எல்லா தரப்பினரும் பார்க்கலாம் .

Spread the love