சங்குப்பட்டி என்னும் கிராமத்து காவல் நிலைய எல்லையில் கொலை ஒன்று நடக்கிறது ,கொலைகாரர்கள், கொல்லப்பட்ட நபரின் உடலில் பல சவரன் நகைகளோடு பிணத்தை விட்டு சென்று விடுகின்றார்கள் ,மறுநாள் காலை அந்த பகுதி வழியே செல்லும் பிரதீப் (பிரேம்ஜி) பிணத்தைப் பார்த்து அதை நகர்த்தி வைத்துவிட்டு,கொலையுண்டு கிடப்பவருக்கு சொந்தமான வாட்ச், ஒரு செயின் மற்றும் போனை எடுத்துக் கொண்டு சங்குப்பட்டி காவல் நிலையத்துக்குப் புகார் கொடுக்கச் செல்கிறார்.உண்மையான கொலையாளிகள் பக்கத்துக் காவல் நிலையத்தில் சரணடைகின்றார்கள். இதனிடையே பிணத்தின் கழுத்திலிருந்த மீதி நகைகள் எங்கே போனது என்ற கேள்விகளும் எழு, காவல்துறையினருக்கு பிரேம்ஜியின் மீது சந்தேகம் விழுகின்றது . உண்மையில் நகைகளை எடுத்தவர்களை காவல் அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடிந்ததா? என்பதே இந்த ‘சத்திய சோதனை’யின் மீதி கதை

பல படங்களில் தன இயல்பான நடிப்பை கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ள ,பிரேம்ஜி இந்த படத்தில் கிராமத்து இளைஞன் கதாபாத்திரத்தில் யதார்த்தமான நடிப்பை கொடுத்து மீண்டும் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார். ,நாயகியாக நடித்துள்ள ஸ்வயம் சித்தா கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தியுள்ளார், போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் சித்தன் மோகன் மற்றும் செல்வன் முருகன் இருவரும் தங்களது டைமிங் காமெடிகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கின்றார்கள்,மேலும் லட்சுமி பாட்டி ,நீதிபதி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஞானசம்பந்தம் போன்றோரும் தங்கள் பங்குக்கு குறைவின்றி நிறைவாக நடித்துள்ளார்கள்
.
இசையமைப்பாளர் ரகுராமின் இசையில் பாடல்களும், தீபன் சக்கரவர்த்தியின் பின்னணி இசையும் படத்தின் கதை நகர்வுக்கு பெரிதும் துணை நின்றுள்ளன, கதை நிகழும் களத்தை சரணின் ஒளிப்பதிவு செவ்வனே பதிவு செய்துள்ளது, கலை இயக்குநர் வாசுதேவனின் கை வண்ணங்கள் கதையின் காலஓட்டத்தை கண் முன்னே விரிய செய்துள்ளது.
ஒரு கிடாயின் கருணை மனு படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம் சத்திய சோதனை. ஒரு கிராமம், அதில் வாழும் மக்கள், அவர்களின் வாழ்வியல் என்ற அம்சத்தை கையில் எடுத்து கொண்டு குறிப்பிட்ட நடிகர்களை கொண்டு காட்சிகளை அமைத்து மிகவும் இயல்பாகவும் ,ரசிக்கும் விதமாகவும் காட்சிகளை அமைத்து படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் சுரேஷ் சங்கையா.
எளிய பட்ஜெட்டில் கதாபாத்திரங்களுக்கேற்ற நட்சத்திர தேர்வுடன் நிறைவான படமாகே உருவாகியுள்ள இந்த சத்திய சோதனையை அனைவரும் பார்த்து ரசிக்கலாம் .
