ராயர் (ஆனந்த ராஜ்) ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர்,, அவரது தங்கை(கஸ்தூரி) பல ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டு அவரை பிரிந்து வீட்டை விட்டு வெளியேறி விட்டதால், தன் மகளை (சரண்யா) மிகவும் கவனமாக வளர்த்து வருகிறார். இப்படிபட்ட சூழ்நிலையில் , உங்களோட மகளுக்குக் காதல் திருமணம்தான் நடக்கும் என ராயரிடம் வாக்கு சொல்கிறார் ஜோசியர் (மனோபாலா).இந்த சமயத்தில் நாயகன் அன்பு ( கிருஷ்ணா), காதலர்களைப் பிரிக்கும் வேலையை செய்யும் , காதலர்களுக்கு எதிரான சங்கத்தில் இருக்கிறார். இந்த சங்கத்திற்கு தலைவராக மொட்டை ராஜேந்திரன் இருக்கிறார். அன்புக்கும் ராயர் மகளுக்கும் ஏற்படும் மோதல் கடைசியில் காதலாக ஆனதா? , இவற்றுக்கு இடையில் ஜோசியரின் வாக்கு பலித்ததா? இல்லையா ?ஆனந்த் ராஜ் தன் மகளை பத்திரமாக பாதுகாக்க முடிந்ததா? இல்லையா ?இது போன்ற வினாக்களுக்கான விடையை தருகிறது ‘ராயர் பரம்பரை’படத்தின் மீதி கதை

நடனம், ஆக்ஷன்,காமெடி என பல வகைகளில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்த கிடைத்த வாய்ப்பை கதையின் நாயகனான கிருஷ்ணா பயன்படுத்தியுள்ளார்.

சரண்யா வழக்கமான நாயகி வேடத்தில் , கிடைத்த கதாபாத்திரத்துக்கு ஏற்ற வகையில் நடித்துள்ளார்,
ஆனந்தராஜ் காமெடி ப்ளஸ் வில்லனாக நடித்துள்ளார் ,மற்றும் மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, சேஷு, பவர் ஸ்டார் சீனிவாசன் போன்றோரும் வழக்கமான தங்கள் பாணி நடிப்பில் நடித்துள்ளர்கள், ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசு,இசைஅமைப்பாளர் கணேஷ் ராகவேந்திரா இருவரும் கதைக்கேற்ற வகையில் தங்களது பங்களிப்பை கொடுத்துள்ளார்கள் ,நல்ல நடிகர்கள்,காமெடி காட்சிகள்,ஆக்சன் காதல் என அந்த அனைத்தும் நிறைந்த ஜனரஞ்சகமான படத்தை கொடுக்க நினைத்துள்ளார் அறிமுக இயக்குநர் ராமநாத்.டி.ஆனால் அதற்க்கு அவர் எடுத்துக்கொண்ட கதை பழையதாகாக இருந்தாலும் திரைக்கதையிலாவது இன்னமும் புதிய அம்சங்களை இணைத்து விறுவிறுப்பாகியிருக்கவேண்டும் .

டைம் பாஸுக்கு படம் பார்ப்பவர்கள் பார்க்கலாம்.
