Monday, May 4

பம்பர் -விமர்சனம்

பம்பர்- விமர்சனம்

கதையின் நாயகனான புலிப்பாண்டி (வெற்றி),அவர் தன் நண்பர்களோடு சின்ன சின்ன திருட்டு வேலைகளை செய்து வாழ்ந்து வரும் நிலையில், அந்த ஊருக்கு புது ஸ்.பி யாக வரும் அருவி மதன் புலிபாண்டியையும் நண்பர்களையும் கைது செய்ய திட்டமிட ,அதிலிருந்து தப்பித்துக்கொள்ள புலிப்பாண்டி(வெற்றி) சபரி மலைக்கு மாலை அணிந்துகொண்டு சபரிமலை செல்கிறார் ,அங்கு ஒரு முஸ்லீம்  பெரியவரிடமிருந்து (ஹரிஷ் பேரடி) லாட்டரிசீட்டு ஒன்றை வாங்குகிறார் அந்த லாட்டரி சீட்டை அங்கேயே தொலைத்தும் விடுகிறார், ஆனால் அவர் வாங்கிய அந்த சீட்டுக்கு 10 கோடி பரிசு விழுகிறது,அதை எடுத்து வைத்திருந்த இஸ்மாயில் (ஹரிஷ் பேரடி)தனது குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி புலிப்பாண்டியிடம் கொடுத்துவிட தூத்துக்குடி செல்கிறார்.இறுதியில் இஸ்மாயில் ( ஹரீஷ்), புலிப்பாண்டியை (வெற்றி) தேடிக் கண்டுபிடித்து லாட்டரி சீட்டை கொடுத்தாரா? இல்லையா? அதன் பின் என்ன நடந்தது? – இதுதான் மீதி திரைக்கதை.

கதையின் மைய கதாபாத்திரத்தில் வெற்றி இயல்பாக நடித்துள்ளார் அவரது மாமன் மகளாக ஷிவானி கதாநாயாகியாய் , கொடுத்த பாத்திரத்துக்கு குறைவின்றி நிறைவாக நடித்துள்ளார், கேரளாவில் வசிக்கும் வயதான, நேர்மையான, இஸ்லாமியர் கதாபாத்திரத்தில் ஹரீஷ் பெரேடிசிறப்பான நடிப்பை வெளிபடித்தியுள்ளார், மேலும் தங்கதுரை, கவிதா பாரதி, அருவி மதன்,ஜிபி முத்து போன்றோரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்துக்கு ஏற்ற வண்ணம் இயல்பான நடிப்பை வழங்கியுள்ளனர்.

தூத்துக்குடி மற்றும் கேரளா பகுதிகளை சிறப்பாக பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி,கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்களும் சிருஷ்ணாவின் பின்னணி இசையும் கதையோட்டத்துக்கு பெரிதும் உதவியுள்ளன . பணத்தையும் மனத்தையும் அதோடு மத நல்லிணக்கத்தையும் வலியுறுத்தும் நல்ல மெசேஜூடன் வலுவான திரைகதையும் சேர்த்து வந்துள்ளது பம்பர் படத்தை இயக்குனர் M .செல்வகுமார் நன்கு உருவாக்கியுள்ளார்.

பம்பர் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம்

Spread the love