Sunday, April 26

3 BHK – திரை விமர்சனம்

சித்தார்த், சரத்குமார், தேவயாணி, யோகிபாபு, மீதா ரகுநாத், சைத்ரா மற்றும் பலர் நடித்துள்ள ‘3 BHK’ திரைப்படத்தினை ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ளார்.

நடுத்தர குடும்பத்து மக்களின் வருவாயில் இரண்டில் ஒரு பங்கு அவர்கள் குடியிருக்கும் வாடகை வீட்டிற்கு செலவாகி விடுகிறது அதனால் நடுத்தர குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொரு குடும்ப தலைவனும் எப்படியாவது ஒரு சொந்த வீட்டை தான் வாங்கி விட வேண்டும் என்ற மிகப்பெரிய கனவுகளுடன் வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்கள் அப்படிப்பட்ட ஒரு குடும்பத் தலைவனின் இல்ல கனவுக்காக அவன் என்னவெல்லாம் பாடுபடுகிறான் என்பதை உணர்ச்சிபூர்வமாக சொல்லும் திரைப்படம் தான் இந்த 3 BHK திரைப்படம்.

வாசுதேவன்(சரத்குமார் ) ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த குடும்ப தலைவன்,அவனது அன்பு மனைவி சாந்தி (தேவயானி )பள்ளியில் படிக்கும் பிரபு என்ற (சித்தார்த் )மகனும் ,ஆர்த்தி என்னும் மகளும் (மீதா ரகுநாத்)அவர்களுக்கு உள்ளார்கள், சரத்குமார் தனக்கு கிடைக்கும் ஊதியத்தை கொண்டு எப்படியாவது ஒரு வீட்டை சொந்தமாக வாங்கி விட வேண்டும் என்னும் மிகப்பெரிய லட்சியக் கனவோடு உள்ளார் , அவருடைய ஊதியத்தில் சிக்கனமாக குடும்பத்தை நடத்தி வருகிறார் அவரது மனைவி தேவயானி, கஷ்டப்பட்டு வீட்டுக் கனவிற்காக சில லட்சம் வரை சரத்குமார் சேகரித்து வைத்திருந்தாலும், அந்த பணம் அவருடைய சிகிச்சைக்காக செலவாகி விடுகிறது ,அதன் பிறகு லோன் வாங்கி வீடு வாங்க வேண்டும் என்று நினைக்கும் பொழுது மகனின் படிப்பு செலவிற்காக அந்த பணமும் செலவாகி விடுகிறது, அதற்குப் பிறகு மகளின் திருமணம் இப்படி அடுக்கடுக்கான குடும்ப சூழ்நிலைகளினால் சரத்குமார் இல்ல கனவு நனவாகாமலே…இருக்கிறது இறுதியில் ,சரத்குமார் தனது லட்சியத்தில் வெற்றி பெற்று தனக்கென்று சொந்தமாக ஒரு வீட்டை வாங்கினாரா?இல்லையா| என்பது தான் 3 BHK ப்படத்தின் மீதி கதை.

சரத்குமார் அவர்களை ஆக்சன் ஹீரோவாக, குணச்சித்திர நடிகராக, நகைச்சுவை கதாபாத்திரமாக என்று பல பரிமாணங்களில், முந்தைய படங்களில் பார்த்திருந்தாலும், இந்தப் படத்தில் வாசுதேவன் என்னும் கதாபாத்திரத்தில் அவர் புதிய பரிமாணத்தில் பரிமளித்துள்ளார்.

சரத்குமாரின் மனைவியாக தேவயானி நடித்துள்ளார்,பல வருடங்களுக்குப் பிறகு இந்த இணை வெள்ளித்தறையில் வலம் வந்துள்ளது ,இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் இணைந்து நடித்த இந்த படத்தில் அவர்களுடைய கதாபாத்திரங்களும் அதனை அவர்கள் ஏற்று நடித்திருந்த விதமும் மிகவும் பாராட்டக் கூடியது. மனைவி ,தாய் என்னும் பரிமாணங்களில் அவரது இயல்பான நடிப்பு கதாபாத்தி டு ஒன்றி போகியுள்ளது.

மேலும் மகனாக நடித்திருக்கும் சித்தார்த், பள்ளியில் படிக்கும் மாணவன் , கல்லூரி மாணவன் , வேலை பார்க்கும் இளைஞன்,பின்னர் கணவன் என ஒரே, படத்தில் பல வயது தோற்றங்களில், தன்னுடைய நடிப்பில் தனி முத்திரை பதித்துள்ளார் சித்தார்த்.வெவ்வேறு வயதுக்கேற்றவாறான உடல் மொழியில் நன்கு வெளிப்படுத்தி நடித்துள்ளார் சித்தார்த்.

சரத் ,தேவயானி மகளாக நடித்திருக்கும் மீதா ரகுநாத், சித்தார்த்துக்கு இணையாக நடித்துள்ள சைத்ரா , வீட்டு புரோக்கராக வரும் யோகி பாபு இவர்கள் எல்லோருமே அவரவர் கதாபாத்திரங்களில் குறைவில்லாத நடிப்பை நிறைவாக வழங்கி இருக்கிறார்கள்

,
படத்தின் இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத், இவரது இசையில் பாடல்களை விட பின்னணி இசை மிகவும் நன்றாக உள்ளது ,பாடல்களும் குறை சொல்ல முடியாத அளவிற்கு உள்ளது ,ஒரு சராசரி குடும்ப தலைவனின் வாழ்வியல் நிகழ்வுகளை சொல்லும் கதைக்கு ஏற்ற வகையில் கேமரா கோணங்களை அமைத்து அதற்கேற்ற ஒளி அமைப்பையும் கொடுத்து தனி கவனம் பெறுகிறார்கள், படத்தின் ஒளிப்பதிவாளர்கள் தினேஷ் கிருஷ்ணன் மற்றும் ஜித்தின் ஸ்டான்லிலாஸ். ,

ஏறிவரும் விலைவாசிக்கு ஈடு கொடுக்க முடியாமல்,,உயர்ந்து வரும் வீட்டு வாடகைக்கு அல்லல் படும் குடும்பத் தலைவர்களின் அடி மனதில் எழும்ப கூடிய, இருக்கக்கூடிய ஒரே ஆசை எலிவளையானாலும் தனிவலையாக அதுவும் நமக்கென்று சொந்தமாக ஒரு வீடு இருக்க வேண்டும் என்பதே அவர்களுடைய பெரும் கனவாக இருக்கும் ,இந்த கனவை காட்சிகள் ஆக்கி, நேர்த்தியான திரைக்கதையோடு, பொருத்தமான நடிகர்களை கொண்டு, படமாக்கி உள்ளார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ்.

[இந்த நடுத்தர குடும்பத் தலைவனின் வாழ்வியல் கதையை ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்துடன் சென்று பார்க்கலாம்

Spread the love