கிறிஸ்தவ தேவலாயத்தில் மக்கள் இறை வழிபாடு நடத்திக் கொண்டிருக்கும் வேளையில் , துப்பாக்கியுடன் சைரஸ் (பி.ஜி.எஸ்) என்பவன் தலைமையில் ,ஒரு குழுவினர் உள்ளே நுழைகிறார்கள் அவர்கள் அந்த தேவலாயத்தை தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து , அந்த தேவாலயத்தின் பாதிரியாரான பென்னட் கேஸ்ட்ரோ (பென்னட் கேஸ்ட்ரோ) விடம் இருக்கும் teleport என்னும் இயந்திரத்தின் கண்டுபிடிப்பை திருடிச் செல்ல முயற்சிக்கிறார்கள். அவர்களிடமிருந்து தனது கண்டுபிடிப்பை பென்னட் கேஸ்ட்ரோ காப்பாற்றுவாரா? என்பதை மீதி கதையாக சொல்வது தான் ‘3.6.9’.

தேவலாய பாதிரியாராக புதுமையான கதாபாத்திரத்தில் கே.பாக்யராஜ் சிறப்பாக நடித்து, தனது பண்பட்ட நடிப்பை பதிவு செய்துள்ளார், வில்லனாக பி.ஜி.எஸ்ஸும் தனது நிறைவான நடிப்பை வெளிப்படுத்தும் வண்ணமாக நன்கு நடித்துள்ளார் .மேலும் பிளாக் பாண்டி, அங்கையர் கண்ணன், அலம் ஷா, நரேஷ், சோஹைல், ராஜஸ்ரீ, சுபிக்ஷா என படத்தில் நடித்திருக்கும் பல கலைஞர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் நன்கு நடித்திருக்கிறார்கள்
இதுபோன்ற கதைகளங்களை கொண்ட படங்களுக்கு ஒளி மற்றும் ஒலியின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது, அந்த வகையில் சிறப்பான காட்சி பதிவுகள் மூலம் ,ஒளிப்பதிவாளர் மாரீஸ்வரன் மோகன் குமாரும் மற்றும் நேர்த்தியான பின்னணி இசை மூலம் இசையமைப்பாளர் கார்த்திக் ஹர்ஷாவும், இயக்குனருக்கு பக்க பலமாய் நின்று படத்துக்கு வலு சேர்த்துள்ளார்கள்.இவர்களோடு படத்தொகுப்பாளர் ஆர்.கே.ஸ்ரீகாந்தும் ,கலை இயக்குனர்ஸ்ரீமன் பாலாஜியும் தங்களது பங்குக்கும் நிறைவாக பணியாற்றி உள்ளார்கள். ஒரு தேவாலயத்துக்குள் நடக்கும் கதையில் விறுவிறுப்பான காட்சிகளையும், அருமையான க்ளைமாக்ஸ் காட்சியையும் கொண்டு எழுதி, இயக்கியிருக்கிறார் சிவா மாதவ்.
மொத்தத்தில் தமிழில் உருவாகியுள்ள இந்த அறிவியல் புனைவு கதையான’3.6.9’ படத்தை யாவரும் பார்த்து ரசிக்கலாம்., .
