Thursday, December 5

கோயம்புத்தூர் கே ஜி சினிமாஸில், உலக நாயகன் கமல்ஹாசனின் “விக்ரம்” பட 100 வது நாள் கொண்டாட்டம் !!!

இந்த வருடத்தின் மிகப்பெரும் பிளாக்பஸ்டர், இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த, உலக நாயகன் கமல்ஹாசனின் “விக்ரம்” திரைப்படம் 100 நாட்களை, வெற்றிகரமாக கடந்துள்ளது. இப்படத்தின் 100 நாள் கொண்டாட்டம் ரசிகர்கள் முன்னிலையில் கோயம்புத்தூர் கே ஜி சினிமாஸ் திரையரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.

உலக நாயகன் கமல்ஹாசன், R.மகேந்திரன் (ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்) இணைந்து தயாரிக்க, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எழுத்து இயக்கத்தில் உருவான இப்படத்தில், உலக நாயகன் கமல்ஹாசனுடன், சூர்யா, விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், என பெரும் நட்சத்திர பட்டாளம் இணைந்து நடித்திருந்தது. உலக நாயகன் கமல்ஹாசனின் அசத்தலான தோற்றம், பிரமாண்ட ஆக்சன் காட்சிகள், பரபரப்பான திரைக்கதை, நட்சத்திர நடிகர்களின் அசத்தலான நடிப்பு என இப்படம் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. இதுவரையிலான பல திரைச்சாதனைகளை முறியடித்து, இந்திய அளவில் பெரும் வசூல் சாதனை படைத்தது. இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் சார்பாக உதயநிதி ஸ்டாலின் தமிழகமெங்கும் வெளியிட்டார்.

இப்படம் தற்போது 100வது நாளை வெற்றிகரமாக கடந்த நிலையில், உலக நாயகன் கமல்ஹாசன், Red Giant Movies இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி இவர்கள் தலைமையில், ரசிகர்கள் முன்னிலையில் பிரமாண்ட விழா இன்று கோயம்புத்தூரில் கே ஜி சினிமாஸ் திரையரங்கில் நடைபெற்றது.

Spread the love