ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ் சினிமாவுல இளைஞர்களை பற்றியும், அவர்களின் காதலை பற்றியும் சொல்லக்கூடிய படங்கள் ஏராளமாக வந்து கொண்டு தான் இருக்கும். காதலும் ,இளைஞர்களும் மாறி இருந்தாலும், அன்றைய சூழ்நிலையில் இருக்கின்ற இளைஞர்களை மையப்படுத்தி படங்கள் வந்து கொண்டே இருக்கும். இப்படி ஏராளமான படங்கள் அதன் சாயலில் வந்தாலும், ஒரு படம் பார்ப்பவர்களை தங்களோடு பொருத்திப் பார்க்கக் கூடிய கதையாக இருந்தால் மிகப்பெரிய வெற்றி பெரும். அதற்கு தற்போது வெளிவந்திருக்கும் யூத் ஒரு சான்று.

தன் ஒரே மகன் கென் மீது அதீத பாசமாக இருக்கும் தேவதர்ஷினி ,அவங்களுக்கு அப்படியே நேர் மாறாக தன் மகனை எந்த நேரமும் திட்டிக்கொண்டு இருக்கும் சிராஜூம், இவர்களுக்கு நடுவில் உள்ள மகன் கென், அம்மாவை அப்பாவியாகவும், அப்பாவை வில்லனாகவும் அவர் பார்க்கிறார் .எப்படியாவது மகன் 10th pass ஆக வேண்டும் என்று வேண்டுகிற தேவதர்ஷினியை ,ஆச்சரியபடுத்தும் வகையில் ,அதிசயமாக எல்லா சப்ஜெக்ட்களிலும் just pass mark வாங்கி 10th pass ஆகிறார் கென். தலைகால் புரியாமல் திக்கு முக்காடி தேவதர்ஷினி நிற்க ,மகனின் மார்க்கினை கேட்டு கிண்டல் பண்ணுறாரு சுராஜ். கென் அதே ஸ்கூல்ல பிளஸ் ஒன் படிக்கிறாரு. சுராஜை நம்பி காதல் திருமணம் செய்து கொண்ட தேவதர்ஷினி, இரண்டு வீட்டாருடைய ஆதரவு இல்லாமல், தனியாய் இருக்கிற தங்களை எப்படியாவது தன்னுடைய பிள்ளை பெருமை படுத்துவார் என்று நம்பிக்கையோடு இருக்காங்க. இத பத்தி எல்லாம் கவலைப்படாத கென்னின் ஒரே லட்சியம் எப்படியாவது school இருந்து ஒரு பெண்ணை காதலித்து அந்த காதல் கல்லூரியிலும் தொடர்ந்து, அவங்களையே கல்யாணம் பண்ணிக்கணும் என்பதுதான். பாக்குற பெண்கள் எல்லாரையும் அவர் லவ் பண்ண முயற்சிக்கிறார் ஆனால் எல்லாரும் No- ன்னுதும் கடமைக்கு என்று ஸ்கூலுக்கு போறாரு.அவர் எதிர்பார்த்த மாதிரி மீனாட்சி இருக்க அவங்கள காதலிக்க முயற்சி பண்றாரு. ஆரம்பத்துல இவருடைய காதலை மீனாட்சி ஏத்துக்க மறுத்தாலும் பிறகு ஏத்துக்குறாங்க.இந்த சூழ்நிலையில அவங்க வெளியூருக்கு செல்ல ,அந்த நேரத்துல பிரியன்ஷி, கென் உடன் ரொம்ப close ஆக பழகுறாங்க. அவங்களுடைய காதலுக்கு எப்படி No சொல்றதுன்னு தெரியாம முழிக்கிறாரு கென் . ஒரு கட்டத்தில் அவங்க காதலை வெளிப்படுத்த மீனாட்சி அதைப் பாக்குறாங்க. உண்மையில் என்ன நடந்ததுன்னு தெரிஞ்சிக்காம கென் காதலுக்கு break up சொல்லுறாங்க. இது பிரியன்ஷி நடத்திய நாடகம் என்று கென்னு க்கு தெரிய வர, இந்த காதலும் போச்சேன்னு கென் வருத்தப்படுறாரு.அடுத்து அவர் கிளாஸ்லேயே படிக்கிற அனிஷ்மாவை பாக்குறாரு. அவங்க கிட்ட காதலை வெளிப்படுத்தும் போது, நண்பனாகத்தான் உன்னை பிடிக்கும்ன்னு அனிஷ்மா சொல்லுறாங்க. இருந்தாலும் காதலை ஏத்துக்கொள்ள வேண்டும் என்றால் அதுக்கு சில நிபந்தனைகள சொல்றாங்க. அந்த நிபந்தனை என்ன? அதை கென் நிறைவேற்றினாரா? சொந்தங்களுக்கு மத்தியிலே அவமானப்பட்டு இருக்கிற தன் அப்பா அம்மாவுடைய எதிர்பார்ப்பை நிறைவேற்றினரா? அவருடைய காதல், படிப்பு என்ன ஆச்சு? அப்படிங்கறதுதான் யூத் படத்துடைய முடிவு.
படத்துல கதாநாயகனாகவும் ,இயக்குனராகவும் பொறுப்பெடுத்து இருக்கிற கென், இன்றைய தலைமுறை பசங்களை நம் கண் முன்னே கொண்டு வந்திருக்காரு. இளமைப் பருவத்திற்கே உண்டான மாறுதல், அதனால் வரும் காதல் அந்த காதலுக்காக எதையும் செய்யும் துணிச்சல் என்று பயம் அறியாமல் துடுக்கான டீன் ஏஜ் பசங்களை திரை வழியாக நமக்கு காட்டிய கென்னுக்கு தமிழ் சினிமாவுல தனி அடையாளம் கிடைத்து அங்கீகரிக்கப்படுவார்.
முதல் படத்திலேயே ஹீரோவுக்கு மூணு கதாநாயகியா என்ற ஆச்சரியத்தையும், தேவையா என்ற கேள்வி எழுந்திருந்தாலும் அந்தக் கேள்விக்கு சரியான பதிலை மூன்று கதாநாயகிகள் மூலமாக விடை கொடுத்திருக்கிறார்கள். காதலுக்கு மீனாட்சியும், சூழ்ச்சிக்கு பிரியன்ஷியாதவும், நட்புக்கு அனிஷா அனில் குமாரும் என மூன்று கதாநாயகிகளும் இளமை நிறைந்த படத்திற்கும், காட்சிகளுக்கும் அழகையும், இயல்பான நடிப்பையும் வெளிப்படுத்தி படத்திற்கு மூவரும் முக்கிய பங்காளிப்பை கொடுத்து இருக்காங்க.
படத்துல கென்னுக்கு அப்பாவாக நடித்திருக்கிற சுராஜ் வெஞ்சாரமூடு , அப்பாக்களின் வருத்தங்களையும், வேதனைகளையும் மகன் மீது இருக்கும் அக்கறையினால் கண்டிப்பாக நடந்து கொள்ளும் விதத்தையும் அச்சு அசலாக அப்படியே பிரதிபலிச்சு இருக்கிறாரு . சுராஜ் உடைய நடிப்பு ஆக சிறப்பு. படத்துல அவரவர்கள் தங்கள் பங்குகேற்ப நடித்துக் கொண்டிருக்க, சுராஜ் மட்டும் அவர்களோடு இணைந்து இருந்தாலும் தனக்கென தனித்துவமான நடிப்பை மிகச் சரியாக ,அழகாக நேர்த்தியாக வெளிப்படுத்தி நடிச்சுயிருப்பாரு சுராஜ்.
இன்னசென்டான அம்மாவாக நடித்திருக்கின்ற தேவதர்ஷினி முகமும், அப்பாவித்தனமான தோற்றமும், அந்த கதாபாத்திரத்திற்கு அழகாக, அச்சு அசலாக, பொருத்தமாக, இருக்கு. மிடில் கிளாஸ் அம்மாவை தேவதர்ஷினி தன் நடிப்பின் மூலமாக வெளிப்படுத்தி யூத் படத்திற்கு தன்னுடைய அனுபவ நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்காங்க.அதேபோல ஸ்கூல் பிரின்ஸ்பாலாக நடிச்சி இருக்குற நளினி. இன்னும் நிறைய கதாபாத்திரங்களில் இடைவெளி இல்லாமல் வெள்ளி திரையில் தொடர்ந்து நடிக்க வாழ்த்துக்களை சொல்லுவோம். மற்றபடி படத்தில் நடித்திருக்கிற நண்பர்களாகட்டும், மற்ற நடிகர்களாகட்டும் காட்சியை கலகலப்பாக நகர்த்தி யூத் படத்தை இளமை குறையாமல் இருக்க பலமாக இருந்திருக்காங்க.
படத்திற்கு மிகப்பெரிய பலமாகவும் அடையாளமாகும் படத்தை பலரும் அங்கீகாரம் கொடுப்பதற்கு காரணமாக இருக்காரு. ஜிவி பிரகாஷ் இவரது பின்னணி இசையும் , பாடல்களும் திரைக்கதையோடு இசைந்து எந்த ஒரு இடத்திலும் தொய்வை ஏற்படுத்தாமல் விறுவிறுப்பை ஏற்படுத்தி இருக்கு. இப்படத்தின் பாடல்கள் ஏதோ ஒரு வகையில் எப்போதும் மனதில் ஒலித்துக்கொண்டிருக்கும் என்பதை உறுதியிட்டு சொல்லலாம்.
படத்திற்கு மற்றொரு பலமாக இருந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விக்கி. பாடல்களில் மட்டும் இல்லாமல், காட்சிகளையும் நேர்த்தியாக சூழலுக்கு ஏற்ற வகையில் நன்கு ஒளிப்பதிவு செய்து யூத் படத்திற்கு உற்ற துணையாக இருந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விக்கி.
முதல் பாதியை காதல், கலாட்டா, காமெடியோட நகர்த்தி இப்படியே போய் படம் முடிந்து விடுமோ என்று நினைத்தால் இரண்டாம் பாதியை அப்படியே மாற்றி புது பாதையில் பயணித்து ,மிக முக்கியமான கருத்தை தடம் மாறாமல் தமிழ் சினிமாவுல தடம் பதித்திருக்கும் ken & gang க்கு வாழ்த்துக்கள்.
