Wednesday, March 18

யானை முகத்தான்- விமர்சனம்

சென்னையில் ஆட்டோ ஓட்டுநகராக இருக்கும் கணேசன் (ரமேஷ் திலக்) கடன் நெருக்கடியால் சிக்கித்தவிப்பவர் விநாயகர் மீது பக்தி கொண்ட கணேசன் (ரமேஷ் திலக் )வசிக்கும் வீட்டிக்கு உரிமையாளரான மல்லிகா (ஊர்வசி), கண்டிப்பானவர் , இந்த சூழ்நிலையில் விநாயகரின் சிலை, அவரது உருவமுள்ள புகைப்படம் என்று எதுவுமே கணேசனின் கண்களுக்கு தென்படாமல் போகிறது. இதனால் திகை க்கும் கணேசிற்கு விநாயகர்.யோகி பாபு வடிவில் நேரிடையாக காட்சி தருகிறார், அதற்க்கு பின் கணேசன் வாழ்வில் நடந்தவை என்ன? விநாயகரே நேராக வந்து கணேசனை சந்திக்க என்ன காரணம் ? போன்ற வினாக்களுக்கு விடை சொல்லுகிறது படத்தின் மீதி கதை

இறைவன் , மனிதனாய் வந்து மனிதனிடம் உரையாடுவது போன்ற காட்சிகளை காமெடி கலந்த படமாக இயக்குநர் ரெஜிஷ் மிதிலா வழங்கியுள்ளார், ஆட்டோ ஓட்டுநராகவும் தீவிரமானவிநாயகப் பக்தருமாகவும் கணேசன் என்னும் கதாபாத்திரத்தில் ரமேஷ் திலக் நடித்துள்ளார் இந்த படத்தின் முழுகதையிலும் பயணிக்கக்கூடிய வாய்ப்பை அவர் நன்கு பயன்படுத்தி இயல்பாக நடித்துள்ளார் , வீட்டின் உரிமையாளராக மல்லிகா என்னும் கதாபாத்திரத்தில் ஊர்வசி கண்டிப்பு ப்ளஸ் உதவும் மனப்பான்மை கொண்டவராக தனக்கே உரிய பாணியில் யதார்த்தமாக நடித்துள்ளார்.

வித்தியாசமான கதாபாத்திரத்தில் யோகிபாபு கதைக்கும் க்கும் காட்சிகளுக்கும் ஏற்ற நிறைவான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

கதையின் நகர்வுகளுக்கு ஏற்ற வகையில் பின்னணி இசையை பரத் சங்கரும் காட்சிகளுக்கு இணக்கமான வண்ணம் கார்த்திக் எஸ்.நாயரின் ஒளிப்பதிவும் அமைந்துள்ளது.

Spread the love