Tuesday, February 3

வான் மூன்று- விமர்சனம்

சினிமாகாரன் வினோத்குமார் சென்னியப்பன் வழங்கும், இயக்குநர் AMR முருகேஷின் ‘வான் மூன்று’ படத்தில் அம்மு அபிராமி, ஆதித்யா பாஸ்கர், வினோத் கிஷன், அபிராமி வெங்கடாசலம், லீலா தாம்சன், டெல்லி கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் ‘வான் மூன்று’ திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகிறது.

காதலித்த பெண் தன்னை ஏமாற்றிவிட்டதாக விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற இளைஞனும் (ஆதித்யா பாஸ்கர்) காதலன் தன்னை விட்டுச் சென்று விட்டதாக விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணும் (அம்மு அபிராமி) ஒரே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்படுகிறார்கள், இந்த சூழ்நிலையில் அங்கே அந்த இளைஞனுக்கு அந்த இளம் பெண் மீது காதல் ஏற்படுகிறது.

தன் அப்பாவை விட்டு விட்டு காதலனை(வினோத் கிஷன்) மணக்கும் பெண்( அபிராமி வெங்கடாசலம்). அவர்களது குடும்ப வாழ்வில் பெரும் நெருக்கடியாக அபிராமிக்கு அவரது மூளைப்பகுதியில் பெரிய பாதிப்பு பாதிப்பு ஏற்படுகிறது.

(லீலா சாம்சன்) மனைவியின் புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்க பொருளாதாரமின்றி அவதிப்படும் கணவர் ( டெல்லி கணேஷ்),

இப்படி மூன்று வகையான கதைகளின் பிணைப்பில் இணைந்து செல்லுகிறது இந்த வான் மூன்று.

நடிப்பை பொறுத்தவரை பக்குவப்பட்ட சீனியர் நடிக நடிகையர் முதல் தற்காலிக நடிக நடிகையர் வரை கொடுக்கப்பட்ட பாத்திரங்களை உள்வாங்கி, நாம் வாழும் இன்றைய சமூக சூழலில் உலாவும் சக மனிதர்களை பிரதிபலித்து இயல்பாக நடித்துள்ளார்கள்


கதை மாந்தர்களின் உணர்வுகளை மையமிட்டு நகரும் காட்சிகளுக்கு உயிரூட்டூம் வண்ணம் சார்லஸ் தாமஸின் ஒளிப்பதிவு நேர்த்தியாக உள்ளது கதாபாத்திரங்களின் என்ன ஓட்டங்களுக்கு இணையாக பயணிக்கிறது R 2 புரோஸின் இசை, மூன்று கதைகளை அழகாக கோர்த்துள்ளது அஜய் மனோஜின் படத்தொகுப்பு .சக மனிதர்களின் வாழ்க்கையையும் அவர்களின் காதலையும் பாசஉணர்வுகளையும் காட்சி வடிவில் கனிவான திரை மொழியில் படமாக்கி உள்ளார் இயக்குனர் AMR முருகேஷ் .

நிறைந்த வானத்தில் அழகுற ஒளிவீசும் நட்சத்திரங்களை மனம் நிறைய பார்த்து ரசிக்கலாம்.

Spread the love