வா வாத்தியார் திரை விமர்சனம்

மக்கள் திலகம் எம்ஜிஆரின் தீவிரமான ரசிகராக இருப்பவர் ராஜ்கிரண் , எம்ஜிஆர் மறைந்த நேரத்தில் அவருக்கு பேரனாக கார்த்தி பிறக்கிறார் ,எம்ஜிஆர் இறந்த சமயத்தில் தனக்கு பேரன் பிறந்ததால் தன் பேரனை நேர்மையாக வளர்க்க வேண்டும் என ராமேஸ்வரன் என்று பெயர் வைத்து வளர்க்கிறார் ஆனால் ஆரம்பத்தில் எம்ஜிஆர் ஆக வளர்ந்த கார்த்தி நம்பியார் மோடுக்கு மாறி ஒரு சூழலில் லஞ்சம் வாங்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகவும் மாறி விடுகிறார், இந்த சூழலில் மஞ்சள் முகம் என்னும் பெயரில் இயங்கக்கூடிய ஒரு குழுவை பிடிக்கும் முயற்சியில் கார்த்தியும் இறங்குகிறார் ,இந்த சூழலில்தான் படத்தின் மீதி கதை நகர்கிறது .

காமெடி கலந்த கதாபாத்திரங்களில் நடிப்பது கார்த்திகுக்கு மிகவும் பொருந்தக்கூடியது ,அத்தகைய கதாபாத்திரத்தில் கார்த்தி சிறப்பாக நடித்து ,ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கிறார், எம்ஜிஆரின் உடல் மொ ழியினை தன்னுடைய கதாபாத்திரத்தில், கார்த்தி சிறப்பாக வெளிக்கொணர்ந்துள்ளார்.மேலும் ராஜ்கிரண் சத்யராஜ் ,ஆனந்தராஜ், நிழல்கள் ரவி என பல சீனியர் நடிகர்கள் அவரவர் கதாபாத்திரங்களில் தங்களுடைய அனுபவ நடிப்பினை படம் முழுவதும் பதித்துச் செல்கிறார்கள்.
சூது கவ்வும், காதலும் கடந்து போகும் என்னும் படங்களை கொடுத்து, ரசிகர்களிடம் தனி கவனம் பெற்று இருந்த இயக்குனர் நலன் குமாரசாமி ,இந்த படத்தில் கார்த்தி உடன் களம் இறங்கி இருக்கிறார். காமெடி ஆக்சன் என செல்லும் கதை, கமர்சியல் படங்களுக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் கொண்ட வகையில் நகர்ந்து செல்கிறது. நாயகியாக நடித்துள்ள கீர்த்தி செட்டிக்கு பெரிய அளவில் படத்தில் ஸ்கோப் இல்லை என்றாலும் தன்னுடைய பங்குக்கு குறைவில்லாத நடிப்பை வழங்கி இருக்கிறார். ஜார்ஜின் ஒளி ளிப்பதிவும்,சந்தோஷ நாராயணனின் பின்னணி இசையும் கதையினை நகர்த்தி செல்வதற்கு தேவையான உறுதுணையினை படம் முழுவதும் கொடுத்து இருக்கின்றன
மொத்தத்தில் வா வாத்தியார் – வரவேற்கலாம்
