இயக்குநர் எஸ்..மணிபாரதி எழுதி இயக்கியிருக்கும் படம் ‘தி பெட்’. இப்படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும், சிருஷ்டி டாங்கே கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மற்றும் ஜான் விஜய், ப்ளாக் பாண்டி, பப்பு, தேவி பிரியா, திவ்யா ஸ்ரீதர், விக்ரம் ஆனந்த் என மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
கதையின் நாயகன் ஸ்ரீகாந்த்தும் ,அவருடைய நண்பர்களும் தங்களுடைய விடுமுறை நாட்களை மகிழ்ச்சியுடன் செலவழிப்பதற்காக, ஊட்டிக்கு செல்ல திட்டமிடுகிறார்கள் .அப்பொழுது தங்களுடன் விலைமாதுவான சிருஷ்டி டாங்கேவையும் அழைத்துக் கொண்டு செல்கிறார்கள், போன இடத்தில் சிருஷ்டி டாங்கே மீது ஸ்ரீகாந்திற்கு காதல் ஏற்படுகிறது, இப்படிப்பட்ட சூழ்நிலையில் மூன்றாவது நாள், சிருஷ்டி டாங்கேவும், நண்பர்களில் ஒருவரும் காணாமல் போக அனைவரும் திகைக்கிறார்கள் , அதன் பிறகு என்ன நடந்தது? என்பதுதான் படத்தின் மீதி கதை.
தான் நடித்த பல படங்களில் சாக்லேட் பாயாக ,காதல் நாயகனாக வலம் வந்திருந்த ஸ்ரீகாந்துக்கு, இந்த படத்திலும் அவருக்கு முற்றிலும் பொருந்தக் கூடிய ஒரு கதாபாத்திரம் மீண்டும் கிடைத்துள்ளது ,அவரும் தனக்கே உரிய பாணியில் இந்த படத்திலும் கதாபாத்திரத்துக்கு ஏற்றபடி அளவாக நடித்துள்ளார். நாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார் ,கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு தக்கபடி குறைவில்லாத நடிப்பை நன்கு அவரும் வெளிப்படுத்தியுள்ளார். மற்றும் பிளாக் பாண்டி,. விஜே பப்பு ,விக்ரம் போன்றவர்கள் நாயகனின் நண்பர்களாகவும் ,அம்மா கதாபாத்திரத்தில் திவ்யா ஸ்ரீதரும் நடித்திருக்கிறார்கள் .மற்றும் காவல்துறை அதிகாரிகள் பாத்திரத்தில் ஜான் விஜயும் ,அவருடன் மற்றுமொரு காவல்துறை அதிகாரியாக தேவி பிரியாவும் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாக நடித்துள்ளார்கள். இயற்கை அம்சங்கள் நிறைந்த பகுதிகளில் தன் கேமரா மூலம் கண்களுக்கு இனிய காட்சிகளை ஒளிப்பதிவாளர் கோகுல் படமாக்கி உள்ளார். தாஜ் நூரின் இசையில் பாடலும்,திரைக்கதையின் காட்சிகளுக்கு ஏற்றதொரு பின்புலத்தை தரும் பின்புல பின்னணி இசையும் நன்கு அமைந்து படத்தின் திரைக்கதைக்கு உறுதுணையாக அமைந்துள்ளது.
வெத்து வேட்டு, பரிவர்த்தனை ஆகிய படங்களை தொடர்ந்து மணிபாரதி இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தில் காதல் ,சஸ்பென்ஸ் என பயணிக்கும் கதைக்கேற்ப , இணக்கமான திரைக்கதை காட்சிகளை இணைத்து, ஒரு பொழுதுபோக்கு படமாக இந்த படத்தினை அவர் உருவாக்கியுள்ளார்.
