Wednesday, December 31

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் இன்று 2024-ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதினை தினத்தந்தி நாளிதழின் நிர்வாக ஆசிரியர் திரு. டி .இ. ஆர். சுகுமார் அவர்களுக்கு வழங்கி சிறப்பித்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் இன்று 02.12 .2025 தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் 2024-ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதினை 50 ஆண்டுகளாக இதழியல் துறையில் பணியாற்றி நிறைந்த அனுபவம் பெற்றுள்ள தினத்தந்தி நாளிதழின் நிர்வாக ஆசிரியர் திரு. டி .இ. ஆர். சுகுமார் அவர்களுக்கு வழங்கி சிறப்பித்தார்.


இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு. மு. பெ. சாமிநாதன், தலைமைச் செயலாளர்
திரு.நா.முருகானந்தம்,இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் திரு. வே. ராஜாராமன், இ. ஆ. ப., செய்தி மக்கள் தொடர்பு துறை கூடுதல் இயக்குனர் (செய்தி) திரு.ச. செல்வராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Spread the love