இன்வெஸ்டிகேஷன் திரில்லரக உருவாகி இருக்கும் படம் ” ரூம் பாய் “திரைப்பட கல்லூரி மாணவர் ஜெகன் ராயன் இயக்கியுள்ளார்.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட ” ரூம் பாய் ” படத்தின் முதல் பார்வை.
ACM சினிமாஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரித்திருக்கும் படத்திற்கு ” ரூம் பாய் ” என்று பெயரிட்டுள்ளனர்.
C.நிகில் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அரண்மனை 4 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஹர்ஷா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மற்றும் இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், youtube புகழ்காத்து கருப்பு, சாதனா, இன்ஸ்டா புகழ் கவிதா விஜயன் மற்றும் கற்பகம் உட்பட பலர் நடித்துள்ளனர்.
சி.பாரதி ராஜன் Dft இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடலாசிரியர் சூரியமூர்த்தி வரிகளுக்கு வேலன் சகாதேவன் இசையமைத்துள்ளார்.
படத்தொகுப்பை D.V. மீனாட்சி சுந்தர் செய்திருக்கிறார்.
நடனம் – தினா
ஸ்டண்ட் – கார்த்திக் வர்மன்
விளம்பர வடிவமைப்பு S.B.ராஜா
உடைகள்- வளையாபதி
மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்
தயாரிப்பு மேலாளர் – முத்துக்குமார்
தயாரிப்பு மேற்பார்வை – A.சக்தி
தயாரிப்பு – சூரியகலா சந்திரமூர்த்தி
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் ஜெகன் ராயன்.
இவர் தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரியில் பயின்றவர்.2002 ஆம் ஆண்டு “தாத்தா ” என்ற குறும்படத்திற்காக சிறந்த ஒலிப்பதிவிற்கான தமிழக அரசின் விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 50க்கும் மேற்பட்ட விளம்பர படங்களை இயக்கியுள்ளார்.

படம் பற்றிய இயக்குனர் ஜெகன் ராயன் நம்மிடையே பகிர்ந்தவை..
இது ஃபேமிலி சென்டிமென்ட் கலந்த இன்வெஸ்டிகேஷன் திரில்லரக உருவாக்கி இருக்கிறோம்.
ஏலகிரியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ரூம் பாயாக பணிபுரிகிறார் நாயகன் சஞ்சய். அந்த ஹோட்டலில் மேனேஜராக பணியாற்றும் ஜேம்ஸ் சக்காரியா என்பவர் நாயகன் மற்றும் அவனது நண்பர்களை காண்ட்ராக்ட் முடிந்தும் மிரட்டி கொத்தடிமைகள் போல் நடத்தி வேலை வாங்கி வருகிறார்.
ஒரு நாள் திடீரென மேனேஜர் மர்மமான முறையில் இறந்து விடுகிறார். அதே நேரத்தில் அந்த பகுதியில் உள்ள சிறுவர் சீர் திருத்த பள்ளியில் கண்காணிப்பாளராக பணியாற்றிய இன்பதுரை என்பவர் மாயமாகிறார்.
மேனேஜர் இறந்ததற்கும் கண்காணிப்பாளர் காணாமல் போனதற்கும் நாயகன் மற்றும் நண்பர்களுக்கு என்ன தொடர்பு என்பதை பரபரப்பான திரைக்கதை மூலம் சொல்லி இருக்கிறோம்.
படப்பிடிப்பு இயற்கை எழில் கொஞ்சும் திருப்பத்தூர், ஏலகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது.
இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது விரைவில் திரையரங்குகளில் படத்தை வெளியிட இருக்கிறோம் என்கிறார் இயக்குனர் ஜெகன் ராயன்.
இந்த படத்தின் முதல் பார்வையை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
