Wednesday, December 31

RB சௌத்திரி தயாரிப்பில், இயக்குநர் சந்தோஷ் ராஜன் இயக்கத்தில், ஜீவா நடிக்கும் “வரலாறு முக்கியம்”

  1. நடிகர் ஜீவா ‘வரலாறு முக்கியம்’ என்ற புதிய படம் மூலம் ரசிகர்கள் கூட்டத்தின் கவர இருக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் சந்தோஷ் ராஜன் எழுதி இயக்குகிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் RB சௌத்திரி தயாரிக்கிறார்.

நடிகை காஷ்மீரா பர்தேஷி (சிவப்பு மஞ்சள் பச்சை படப்புகழ்) கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் பிரக்யா நாகரா, VTV கணேஷ், K.S.ரவிக்குமார், மலையாள நடிகர் சித்திக், சரண்யா பொன்வண்ணன், சாரா, TSK, E ராமதாஸ், லொள்ளு சபா சுவாமிநாதன், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், காளி ராஜ்குமார், ஆதிரை மற்றும் சில முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல் புகழ் ஷான் ரஹ்மான் இசையமைக்கிறார். ஸ்ரீகாந்த் NB (எடிட்டிங்), ராஜு சுந்தரம்-பிருந்தா (நடன அமைப்பு), மதன் கார்க்கி, சந்தோஷ் ராஜன் (பாடலாசிரியர்கள்), R. சக்தி சரவணன் (ஸ்டன்ட் டைரக்ஷன்), மோகன் (கலை), வாசுகி பாஸ்கர் (ஆடை வடிவமைப்பு ), எஸ்.ஏ.சண்முகம் (மேக்கப்), மற்றும் சுரேஷ் சந்திரா (மக்கள் தொடர்பு) ஆகியோர் இப்படத்தின் மற்ற தொழில்நுட்பக் குழுவில் பணியாற்றுகின்றனர்.

சென்னை, கோயம்புத்தூர், ஹைதராபாத் மற்றும் கேரளா ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், பின் தயாரிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் டிரைலர், ஆடியோ மற்றும் உலகம் முழுவதும் திரையரங்கு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Spread the love