அன்பான தகப்பன் எந்தவிதமான வாழ்கை சூழலில் வாழ்ந்துகொண்டுஇருந்தாலும் தன்னுடைய குழந்தையினை ராஜவீட்டுகுழந்தையை போல நினைத்துதான் வளர்ப்பான்அதேபோல அந்தக் குழந்தைக்கும்தன்னுடைய அப்பா ஒரு அரசன்தான் என்ற எண்ணமே இருக்கும் இந்த பாசப்பிணைப்பை பிரதிபலிக்கும் படம்தான் ராஜாமகள்.
பாசமுள்ள தந்தையாக, நடுத்தர வர்க்கத்தின் குடும்பத்தலைவனாக ஆடுகளம் முருகதாஸ் உள்ளார் அவருக்கென்று சொந்தமாக மொபைல் போன் சர்வீஸ் பார்க்கும் கடை உள்ளது இவரது மகளாக மகள் (பிரிதிக்ஷா) மனைவியாக வெலீனா உள்ளனர் மகள் மீது நிறைந்த பாசம் கொண்ட தகப்பனான முருகதாஸ் மகளின் விருப்பங்களை நிறைவேற்றி தருவதில் மீகுந்த ஆர்வம் கொண்டவர் .அவரது மனைவி வெலீனாவோ யதார்த்தமான வாழ்க்கையினை புரிந்து ஏற்றுக்கொண்டவர்,இவ்வாறான சூழ்நிலையில் பிரதிக்ஷா தன்னுடைய பள்ளிதோழன் வசிக்கும் வீடுபோல தனக்கும் ஒரு வீடு வாங்கித் தரவேண்டும் என்று த ந்தையிடம் கேட்கிறாள், மகளது ஆசையினை தட்டிக்கழிக்காமல் அதேபோல வீடு ஒன்று வாங்கித் தருவதாக தந்தை கூறுகிறார்.நடுத்தரவர்க்கத்தின் பிரதிபிம்பமான அந்த தந்தை மகளின் கனவை நிறைவேற்றினாரா? இல்லையா? என்பதுதான் மீதி கதை.
பல படங்களில் சிறிய பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த முருகதாஸுக்கு இந்த படத்தில் கதையின் நாயகனாய் பிரதானபாத்திரமேற்று நடிக்கக்கூடிய வாய்ப்பு ,வரும் அத வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தியுள்ளார்.
மகளாக நடித்துள்ள சிறுமி பிரதிக்ஷா இயல்பாக நடித்து ராசிகளின் மனங்களில் நிறைகிறார் ,
முருகதாஸின் மனைவியாகவும் வெலீனா நடித்திருக்கிறார் வாழ்க்கையின்யதார்த்தை புரிந்துகொண்ட கதாபாத்திரத்தில் , உணர்வுகளை நன்கு வெளிப்படுத்தும் வண்ணம் நடித்துள்ளார்
கதைபேசும் படங்களுக்கு ஏற்ற வகையில் காட்சிகளை நன்கு பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் நிக்கி கண்ணன் சங்கர் ரங்கராஜனின் இசை கதையினூடே இயல்பாக பயணித்துள்ளது.
தந்தை மகளின் பாசத்தை புதிய கதைகளத்தில் பதிவுசெய்துள்ளார் இயக்குனர் ஹென்றி.
குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படம்
