காட்டில் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக வருகின்ற செய்தியினை அறியும் காவலதிகாரி, நிஷாந்தை உடன் அழித்துக்கொண்டு அந்த பகுதிக்கு செல்கிறார், அங்கு அவர் விவேக்ப்ரசன்னாவை பார்த்தபின் நிஷாந்த் மற்றும் விவேக்ப்ரசன்னாவை கைவிலங்குடன் இணைத்து கூட்டி வரும் முன்பாக ,விவேகப்ரசன்னா இன்னமும் உயிருடன்தான் உள்ளார், இறக்கவில்லை என்பது தெரிய வருகின்றது.இந்த நிலையில் நிஷாந்த், விவேக்கை காப்பாற்ற அவருடன் அங்கிருந்து ஓடுகிறார் ,அதன் பின் நடப்பவை மீதி கதை.

நிஷாந்த் ரூசோ , விவேக் பிரசன்னா இருவருக்கும் இந்த படத்தில் தங்களது திறமையினை வெளிப்படுத்த நல்லதொரு வாய்ப்பு அமைந்துள்ளது அதனை அவர்களும் நன்கு பயன்படுத்தியுள்ளார்கள் என்றே சொல்லலாம்,மேலும் காயத்திரி இப்படத்தில் நாயகியாகவும் . ராட்சசன் வினோத் சாகர், அருள் D சங்கர், கோடாங்கி வடிவேல், E ராம்தாஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களிலும் நடித்துள்ளார்கள்,

இது போன்ற கதை களங்களுக்கு ஒளி மற்றும் ஒலியின் ஒருமித்த பங்களிப்பு பெரிய அளவில் கிடைத்தால்தான் இயக்குனரின் காட்சி அமைப்புகள் பாராட்டினை பெறும், அந்த வகையில் இந்த படத்தில் ஒளிப்பதிவாளர் அஸ்வினநோயலின் ஒளிப்பதிவும் மற்றும் ரெஞ்சித் உண்ணியின் பின்னணி இசையும் இயக்குனர் தனபாலன் கோவிந்தராஜுக்கு பக்கபலமாய் அமைந்துள்ளது. இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவரே இப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ள தனபாலன் கோவிந்தராஜு ஆவார்.அவரின் இந்த சர்வைவல் திரில்லர் கதை விறுவிறுப்பான காட்சிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

