Wednesday, December 31

நயன்தாரா – பியாண்ட் தி ஃபேரி டேல்’ ஆவணப்படம்.-ஒரு பார்வை

‘நயன்தாரா – பியாண்ட் தி ஃபேரி டேல்’  -ஆவணப்படம்.

‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்னும் உயரத்தினை திரைத்துறையில் நடிகையர் பெறுவது என்பது அதனை எளிதன்று. அப்படிபட்ட உச்சத்தினை அடைந்து வெற்றிகளிப்புடன் பவனி வரும் .நயன்தாராவின் திரையுலக பயண வாழ்க்கை மேலும் அவரது தனிப்பட்ட திருமண வாழ்க்கை குறித்து அவரது ரசிகர்களுக்கும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் விரிவாக சொல்லுகிறது ‘நயன்தாரா – பியாண்ட் தி ஃபேரி டேல்’ (Nayanthara beyond the fairy tale).என்னும் இந்த ஆவணப்படம்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பல மொழிகளில் சிறந்த நடிகையாக வெற்றி வலம் வரும் நடிகை நயன்தாராவின் வாழ்க்கையில் அவர் எதிர் கொண்ட பல சூழ்நிலை வாழ்வியல் மாற்றங்களையும் அவரது திருமணம் போன்றவை குறித்து இந்த டாக்குமெண்ட்ரி நன்கு எடுத்துரைக்கிறது.

இந்த ஆவணப்படத்தில் இருக்கும்.அவர் ஒரு நன் மகளாக, உற்ற சகோதரியாக, சிறந்த வாழ்க்கைத் துணையாக, பாசமிகு அம்மாவாக, தோள் கொடுக்கும் தோழியாக, தொழில்துறையில் அசைக்க முடியாத ஒரு திறமைசாலியாக என பல முகங்களில் பரிமளிப்பதை பார்க்கலாம்.

நயன்தாராவின் தொடக்ககால திரை வாழ்க்கை முதல் அவர் லேடி சூப்பர் ஸ்டாராக உயரம் தொட்டது வரை இந்த ஆவணப்படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு , இயக்குனர் விக்னேஷ் சிவனுடனான அவரது காதல் பின்னர் திருமணம் பற்றி அழகிய வாழ்வியலை பேசும் விதமாக நன்கு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது

கலைத்துறையில் இவரை ரோல் மாடலாக கொண்டுள்ளவர்களுக்கும், மேலும் அது பற்றிய கனவு கொண்டவர்களுக்கும் இந்த ஆவணப்படம் நல்ல வழிகாட்டும் மேலும் சில தகவல்களையும் எடுத்து சொல்லும்.

.

Spread the love