ஆதிக்க சாதியைச் சார்ந்த கோப்புலிங்கத்தின் (பாலாஜி சக்திவேல்) குடும்பமே வணங்கான்குடிஎன்னும் ஊரின் ஊராட்சி மன்றத்தின் தலைவர் பதவியில் தொடர்ந்து கோலேச்சி வந்த நிலையில் , அந்த ஊராட்சியானது தனி தொகுதியாக அறிவிக்கப்படுகிறது.. அதனால் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கூழ் பானை என்னும் அம்பேத்குமாரை (சசிகுமார்) தலைவர் தேர்தலில் போட்டியிடசொல்லுகிறார் கோப்பு லிங்கம். அவரின் விஸ்வாசியான அம்பேத்குமார் தான் சொல்லியபடி நடப்பார் என்கிற நினைப்பில் இருக்கிறார் கோப்பு லிங்கம்.ஆனால் அம்பேத் குமார்.தலைவரானதும் ஊர் மக்களின் நலனில் நாட்டம் காட்ட, கொதித்து எழும் கோப்புலிங்கம் ,அம்பேத் குமாரை அவமானப்படுத்துவதோடு , அடுத்து தன்னுடைய சொல்படி நடக்கும் வேறு ஒருவரை தலைவராக்க முடிவு செய்கிறார் அதன் பிறகு அந்த ஊரில் என்ன நடக்கிறது என்பதே கதை.
பல கிராமத்து கதாபாத்திரங்க்ளில் இதற்குமுன் சசிகுமார்,நடித்து இருந்தாலும் இந்த படத்தில் அவரது தோற்றமும், உடல் மொழியும், அவரை புதிய பரிமாணத்தில் மிளிர வைத்துள்ளது , அவரின் மெனக்கெடல் வீண்போகாதவண்ணம் ரசிகர்களை அவர் கவர்ந்துள்ளார் என்று உறுதியாக சொல்லலாம்
கோப்புலிங்கமாக நடித்துள்ள பாலாஜி சக்திவேலின் கதாபாத்திரத்துமும் அவரது நடிப்பில் தனி கவனம் பெறுகிறது . சசிகுமாரின் மனைவியாக நடித்துள்ள ஸ்ருதி பெரியசாமி, தனக்கு கொடுக்கப்பட்ட காட்சிகளில் நன்கு நடித்துள்ளார் ஜிப்ரான் இசையில் பாடல்களை விட, பின்னணி இசை கதையுடன் நன்கு பயணிக்கிறது . ஆர்.வி.சரணின் ஒளிப்பதிவு, காட்சிகளின் பின்புலத்தை நன்கு பதிவு செய்துள்ளது

காலம் எவ்வளவு அறிவியல் முன்னேற்றத்தினை நோக்கி பயணித்தாலும், இன்னமும் ஏராளாமான கிராமங்களில் அடித்தட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதோடு, ,அதற்காக அரசு செய்யும் சின்ன சின்ன சலுகைகளும், அவர்களின் கைக்கு செல்லாமல் தடுக்கப்படுவதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன என்பதை இந்த நந்தன் பதிவு செய்துள்ளது .
