Thursday, January 15

‘N4’ -விமர்சனம்

சென்னை காசிமேடு பகுதியில் மைக்கேல் தங்கதுரை, கேப்ரில்லா, வினுஷா தேவி, அப்சல் அமீத் ஆகிய நான்குபேரும் வாழ்ந்து வருகிறர்கள் இவர்கள் அங்கு மீன் வியாபாரம் செய்து வருகிறார்கள். அந்த பகுதியில் N4 காவல் நிலையம் உள்ளது அந்த N4 காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக அனுபமா குமார் இருக்கிறார். இப்படிபட்ட நிலையில் ஒருகட்டத்தில் காசிமேடு பகுதியில் ஒரு சம்பவம் நடைபெறுகிறது. இதனால் அனைவருக்கும் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது அந்த பிரச்சனைகளை எப்படி அவர்கள் சந்தித்தார்கள்? ,அதிலிருந்து எப்படி மீண்டார்கள் ? என்பது தான் படத்தின் மீதி கதை.

மைக்கேல் தங்கதுரை, வினுஷா தேவி, கேப்ரில்லா, வடிவுக்கரசி ,அனுபமா குமார், அபிஷேக் சங்கர், கேப்ரில்லா, அழகு என இதில் பல நடிகர்கள் நடித்துள்ளார்கள் ,அனைத்து நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரங்கலின் தன்மை மாறாது இயல்பாக நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்திற்கு ஜி. பாலசுப்பிரமணியம் இசையமைத்திருக்கிறார், இயக்குனர் லோகேஷ் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் கடல் சார்ந்த பகுதிகளை காட்சி வடிவில் ஒன்றிணைத்துள்ளது

விறுவிறுப்பான சஸ்பென்ஸ் கலந்த ஆக்‌ஷன் திரில்லரான இப்படத்தில் பிரபல சின்னத்திரை சீரியல் கலைஞர்கள் நடித்திருப்பது ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீது ஈடுபாட்டையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியது.

கடல், துறைமுகம், மீன்பிடி தலம் என அவர்களின் வாழ்வியலை பதிவு செய்துள்ள இந்த படம் இளம் பார்வையாளர்களை அதிகம் கவரும்.

Spread the love