முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களுடன், இளைஞர்களை கவரும் திரைப்படம் ‘முஸ்தபா முஸ்தபா’.
தொலைக்காட்சி சேனலில் வேலை பார்க்கும் நாயகன் சதீஷ் மற்றும் டாக்டராக உள்ள நாயகி மோனிகா சின்னகோட்லா இருவரின் காதலுக்கு வீட்டில் சம்மதம் கிடைத்து திருமணம் நடைபெற சில நாட்களே இருக்கக்கூடிய சூழலில் சதிஷ் சம்பந்தப்பட்ட ஒரு காணொளி இணையதளத்தில் வெளி வருகிறது, இந்த வீடியோவினால் தன்னுடைய திருமணமே தடைபட்டு போய்விடும் என்று நினைக்கும் சதீஷ் அந்த வீடியோவை எப்படியாவது நீக்கிவிட வேண்டும் என்று முழுமூச்சாக களமிறங்குகிறார், இதன் பின் நடந்தது என்ன ?வீடியோவை நீக்கும் அவரது முயற்சி வெற்றி பெற்று,அவரது திருமணம் நடைபெற்றதா ? அந்த வீடியோவை யார் இணையத்தில் பரவ விட்டது? போன்றவற்றை சொல்லுகிறது ‘முஸ்தபா முஸ்தபா’. படத்தின் மீதி கதை.
சில நடிகர்களுக்கு சில கதாபாத்திரங்கள் 100% பொருந்திப் போகும் என்று சொல்வார்கள், அந்த வகையில் நடிகர் சதீஷுக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய கதாபாத்திரத்தில் அவரும் இந்த ‘முஸ்தபா முஸ்தபா’நன்கு நடித்து தான் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்துள்ளார். சதீஷ் நண்பராக சுரேஷ் ரவியும் இந்தப் படத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட காட்சிகளில் நன்கு நடித்துள்ளார்.,மேலும் சதீஷுக்கு இணையாக நடித்துள்ள மோனிகா சின்ன கோட்லா , மானசா சவுத்ரி, ஜாவா சுந்தரேசன் ,சூப்பர் ஹிட் சுப்பிரமணி என பிற கலைஞர்களும் அவரவர்களுக்கு உரிய கதாபாத்திரத்தில் நன்கு நடித்துள்ளார்கள்.
கதைக்கும் ,காட்சிகளுக்கும் பொருத்தமான வகையில் ஒளிப்பதிவாளர் கே எஸ் விஷ்ணுவின் பணி அமைந்துள்ளது .எம். எஸ். ஜோன்ஸ் ரூபர்ட்டின் இசையில் பாடல்கள் பார்ப்பதற்கும், கேட்பதற்கும் ரசிக்கும்படி உள்ளது ,பிண்ணணி இசையும் ,கதையோட்டத்துடன் பயணித்துள்ளது. படத்தை இயக்கியிருப்பவர் பிரவீன் சரவணன். இக்கால இளைஞர்களின், குறிப்பாக காதலிலிருந்து கல்யாணத்திற்கு மாறும் காலகட்டத்தில் உள்ள இளைஞர்களின் வாழ்வியல் சம்பவங்களை நகைச்சுவை கலந்து படமாக்கி உள்ளார்.
மொத்தத்தில் இந்த ‘முஸ்தபா முஸ்தபா’.காதலும் காமெடியும் கலந்த பொழுதுபோக்கு திரைப்படம்
