தமிழ் சினிமாவின் முதல் Found Footage Horror Film மர்மர்.

ஜவ்வாது மலைப்பகுதியில் இருக்கிற கிராமத்தில , வருஷா வருஷம் நடக்கக்கூடிய கன்னி பூஜையை செய்ய விடாமல் அங்கு இருக்கக்கூடிய சூனியக்காரியோட ஆவி தடுக்கிறதா சொல்லப்படுது, அது மட்டும் இல்லாம அந்த மலைப்பகுதி காட்டுக்கு போனவங்க யாருமே திரும்பி வந்ததே இல்லை அப்படின்னு அந்தப் பகுதி கிராம மக்கள் சொல்றாங்க ,இதைப் பற்றிய விவரத்தை தெரிஞ்சுகிட்ட ஒரு குழுவினர் நான்கு பேர் சேர்ந்து ஆவணப்படம் எடுப்பதற்காக அந்த காட்டுப்பகுதிக்கு போக முடிவு எடுக்குறாங்க, அவங்களுக்கு அந்த காட்டுப் பகுதியில் வழி காட்டுறதுக்காக ஒரு கிராமத்து பொண்ணு அவங்க கூட சேர்ந்துகிறா ,இந்த ஐந்து பேரும் அந்த காட்டுப் பகுதிக்குள்ள ஆவணப்படம் எடுக்குறதுக்காக போறாங்க.. அப்படி போன அவர்கள் எல்லாரும் அந்த காட்டுப் பகுதியில் இருந்து திரும்பவும் உயிருடன் வந்தார்களா? உண்மையிலேயே அந்த கிராம மக்கள் சொல்ற மாதிரி சூனியக்காரியின் ஆவி அந்த காட்டுப்பகுதியில் இருக்கா ?இல்லையா?அப்படிங்கிறது தான் இந்த மர்மர் படத்துடைய மீதிக்கதை.

இந்த படத்துல ரிச்சி கபூர், தேவராஜ் ஆறுமுகம், சுகன்யா சண்முகம்,யுவிகா ராஜேந்திரன், அரியா செல்வராஜ் இந்த அஞ்சு பேரும் முக்கியமான கதாபாத்திரங்களைஏற்று நடித்திருக்காங்க.. இந்த ஐந்து கதாபாத்திரங்களுமே படத்தோட கதையை நகர்த்தி செல்லுறதுல முக்கிய பங்காற்று இருக்கு,இந்தப் படத்துல ஒரு சிறப்பு அம்சம் என்னன்னா பவுண்ட் ஃபுட்டேஜ் அப்படின்னு சொல்லக்கூடிய சொல்லக்கூடிய நேரடியாக கேமராவில் பதிவாகக் கூடிய காட்சிகளைக் கொண்டு எடுக்கப்பட்ட முதல் தமிழ் திகில் படம் அப்படிங்கறதுதான்.
இது போன்ற திகில் கதையை மையமாகக் கொண்ட படங்களுக்கு ஒளியும் ஒலியும் இரண்டு கண்களாக அமைய வேண்டியது மிகவும் முக்கியம், அந்த வகையில் இந்த படத்தினுடைய ஒளிப்பதிவாளர் ஜேஸன் வில்லியம்ஸ் இரவு நேர காட்சிகளை ரொம்ப சிறப்ப சிறப்பான முறையில் படமாக்கி இருக்காரு ..படத்தை பார்க்கிற பார்வையாளர்கள் அந்தப் பகுதிக்கு தாங்களே பயணம் செய்தது போன்ற உணர்வை தன்னுடைய கேமரா கோணங்கள் வழியாக பதிவு செய்திருக்கிறார். இந்த படத்துக்கு இசையமைப்பாளர் இல்லைனாலும் , ஒலி வடிவமைப்பாளர் கெவின் பெட்ரிக் படத்தின் காட்சிகளில் பின்னணியில் எழும்ப கூடிய ஒலி ஓசைகளை நுணுக்கமாக பதிவு செய்திருக்கிறார் .இந்தப் படத்தை எழுதி இருக்கிறவர் ஹேம்நாத் நாராயணன் விறுவிறுப்பான திரைக்கதையுடன் கூடிய, திகில் அம்சங்கள் நிறைந்த படத்தை சிறப்பான முறையில் புதிய பாணியில கொடுத்திருக்காரு.
மர்மர் நல்லதொரு மர்மக்கதை
