விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் கிச்சா சுதீப் நடித்துள்ள திரைப்படம் “மார்க்”

கர்நாடகாவில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புமிக்க போதை பொருள் பதுக்கி வைக்கப்படுகிறது ,அது பெரிய டானான சந்திராவினுடையது, இந்த போதைப் பொருளை கடத்துவது குரு சோமசுந்தரம். போலீஸ் சூப்பிரண்டான கிச்சா சுதீப் இந்த போதைப் பொருள் கடத்தல் குழுவினை கண்டுபிடிக்க முயலுகிறார் , மற்றொருபுறம் முதல்வர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கும் பொழுது அவரது மகன் ஷைன் டாம் சாக்கோ ,தான்தான் அடுத்த முதல்வராகி விட வேண்டும் என்று நினைக்க ,தனக்குப் பிறகு சீனியர் ஒருவர் தான் முதல்வராக வேண்டும் என்று முதல்வர் நினைக்க, இதனால் தாயை கொன்று விற்று ,தன் தாய் தன்னை முதல்வராக்க கடிதம் கொடுத்து விட்டதாக கூறி தானே முதல்வர் பதவிக்கு தயாராகிறார், முதல்வரை,அவரது மகனே கொலை செய்வதை யாரும் அறியாமல் ரகசியமாக போன் மூலமாக படமாக்கி பதிவு செய்கிறார் ஒரு மருத்துவர் ,இதன் பின் அந்த போனை தேடி ஷைன் டாம் சாக்கோ டாக்டர் வீட்டுக்கு செல்கிறார் ,இதன்பின் பல இடங்களில் குழந்தைகள் கடத்தப்படுகின்றனர் ,அதற்குப் பிறகு மார்க் அந்த குழந்தைகளை காப்பாற்றினாரா ? டாக்டர் படமாக்கிய அந்த வீடியோ என்ன ஆனது ? காவல்துறை அதிகாரியான கிச்சாசுதீப் போதை கும்பலை பிடித்தாரா ?என்பதுதான் மார்க் படத்தின் மீதி.
மிரட்டலான, ஆக்சன் நடிப்பில் கிச்சா சுதீப் ,கதையின் நாயகனாக சிறப்பாக நடித்துள்ளார் . நவீன் சந்திரா, விக்ராந்த், தீப்ஷிகா ,ஷைன் டாம் சாக்கோ, குரு சோமசுந்தரம்,யோகிபாபு என அனைவரும் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாக நடித்து இருக்கிறார்கள் .அதிரடி .ஆக்சன் கலந்த கதைக்கு உயிரோட்டமாக நிற்பது சேகர் சந்திராவின் ஒளிப்பதிவும்,அஜினீஷ் லோக்நாத்தின் இசையும் படத்தின் வேகத்திற்கும் விறுவிறுப்பிற்கும் பக்க துணையாக உள்ளது. அது மட்டுமின்றி இந்த ஆக்ஷன் த்ரில்லர் படத்த்தில் பணியாற்றியுள்ள 5 சண்டைப்பயிற்சி இயக்குநர்களும் படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்கு பக்கபலமாய் நின்றுள்ளார்கள் . முழு நீள கமர்ஷியல் படத்துக்கு தேவையான அத்தனை அம்சங்களையும் ஒருங்கே கலந்து ,விறுவிறுப்பான திரைக்கதையுடன் பக்கவான ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படத்தை இயக்குனர் விஜய் கார்த்திகேயா உருவாக்கி இருக்கிறார்.
மொத்தத்தில், மார்க் – ஆக்ஷன் ரசிகர்களிடம் பாஸ் மார்க் வாங்கும் .
